Kidny

Kidny

கிந்தோட்டை வன்முறை... கைது செய்யப்பட்ட 22 பேரின் விளக்கமறியல் அப்டேட்... ( இம்மாதம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களும் உள்ளே)


கிந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்ட குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப் பட்டிருந்த 22 பேரும் நேற்று காலி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்கள் அனைவரையும் எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதிவான் லலித் பத்திரண உத்தரவிட்டார்.


கிந்தோட்டை வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நான்கு முஸ்லிம்களும் 18 சிங்களவர்களுமாக மொத்தம் 22 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நவம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டி ருந்த நிலையிலேயே குறித்த விளக்கம றியல் உத்தரவு மேலும் 14 நாட்களால் நீடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை பிணையில் விடுவிப்பதற்கான முயற்சி களை கிந்தோட்டை அனர்த்த நிவாரண குழு முஸ்லிம் சட்டத்தரணிகளின் ஒத் துழைப்புடன் முன்னெடுத்து வருவதாக அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் பாஸி (நளிமி) தெரிவித்தார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சிங்கள இளைஞர்களில் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏலவே நீதிவானினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிந்தோட்டை வன்முறை... கைது செய்யப்பட்ட 22 பேரின் விளக்கமறியல் அப்டேட்... ( இம்மாதம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களும் உள்ளே) கிந்தோட்டை வன்முறை... கைது செய்யப்பட்ட 22 பேரின் விளக்கமறியல் அப்டேட்... ( இம்மாதம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களும் உள்ளே) Reviewed by Madawala News on 12/02/2017 02:18:00 PM Rating: 5