Kidny

Kidny

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு 350 கோடி செலவாகும் ..


உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு 3.5 பில்லியன் ரூபா செலவிடப்பட
உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் முதன் முறையாக நடத்தப்பட உள்ளது.

தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைமை அடிப்படையில் தெரிவுசெய்யப்படவுள்ள வேட்பாளர்களையும் தேர்தலட முறைமை குறித்தும் வாக்காளர்களை தெளிவுபடுத்த வேண்டியிருப்பதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 5.5 பில்லியன் ரூபா தேர்தல்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 3.5 பில்லியன் ரூபா உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக செலவிடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு 350 கோடி செலவாகும் ..  உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு 350 கோடி செலவாகும் .. Reviewed by Madawala News on 12/03/2017 02:33:00 PM Rating: 5