Yahya

300 மில்லியன் அமெரிக்க டொலர் அட்வான்ஸ் நாளை கிடைப்பதுடன் ஹம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றது.


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகள் நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது.

அதனூடாக முதல் ஒப்பந்தத்திற்கு இணையான ஒப்பந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள பங்குதாரர் ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதியை வழங்கியது.

அதன்படி "ஹம்பாந்தோட்டை இன்டர்நேஷன் போர்ட் கிராப்" தனியார் நிறுவனத்தின் மூலதனப் பங்கின் அடிப்படையில் நூற்றுக்கு 85 வீதம் சைனா மார்சண்டைஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்திற்கு அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உரித்தாகும்.

அதில் நூற்றுக்கு 15 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு கிடைக்கின்றது.

"ஹம்பாந்தோட்டை இன்டர்நேஷன் போர்ட் சர்வீஸ்" தனியார் நிறுவனத்தில் இருந்து நூற்றுக்கு 58 வீதம் "ஹம்பாந்தோட்டை இன்டர்நஷனல் போர்ட் கிராப்" தனியார் நிறுவனத்திற்கு உரிமையாவதுடன் எஞ்சிய 42வீதம் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு கிடைக்கின்றது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வளர்ச்சிக்காக மேலுள்ள நிறுவனங்களுக்கு இடையில் கடந்த ஜூலை மாதம் 29ம் திகதி கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வளர்ச்சிக்காக மேற்குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு 99 வருடகால குத்தகை ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்காக இலங்கைக்கு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பபெற்றுள்ளன.

அதற்கான முற்பணமாக முன்னூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளை இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

ஆறுமாத காலத்திற்குள் முழுப்பணமும் அரசாங்கத்துக்கு கிடைப்பதுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான முதலீடாக சீன நிறுவனம் 600 மில்லியன் டொலர்களை ஒதுக்கவுள்ளது
300 மில்லியன் அமெரிக்க டொலர் அட்வான்ஸ் நாளை கிடைப்பதுடன் ஹம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றது. 300 மில்லியன் அமெரிக்க டொலர் அட்வான்ஸ் நாளை கிடைப்பதுடன் ஹம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றது. Reviewed by Madawala News on 12/08/2017 01:49:00 PM Rating: 5