Yahya

சிதைவடைந்த , திரிபுபடுத்தப்பட்ட நாணயத் தாள்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் நீடிப்பு


திரிபுபடுத்தப்பட்ட மற்றும் சிதைவடைந்த நாணயத் தாள்களை மாற்றிக் கொள்வதற்காக
வழங்கப்பட்டிருந்த கால எல்லை எதிர்வரும் மார்ச் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி இந்தக்கால எல்லை நீடிப்பு தெரிவித்துள்ளார். 
இவ்வாறான நாணயத்தாள்களை எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுமதி பெற்ற வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி ஏற்கனவே மக்களுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிதைவடைந்த , திரிபுபடுத்தப்பட்ட நாணயத் தாள்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் நீடிப்பு சிதைவடைந்த , திரிபுபடுத்தப்பட்ட நாணயத் தாள்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் நீடிப்பு Reviewed by Madawala News on 12/30/2017 11:49:00 PM Rating: 5