Yahya

ஈராக்கில் பிடிபட்ட ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் உறுப்­பி­னர்கள் 38 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.


ஈராக்கில் தீவி­ர­வாதக் குற்­றச்­சாட்டில் கைதான 38 பேருக்கு தூக்­கி­லிட்டு மர­ண­த ண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு நீதி அமைச்சு தெரி­வித்­தது.

அவர்கள் அனை­வரும் ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் உறுப்­பி­னர்கள் என அந்த அமைச்சு கூறு­கி­றது. தென் நக­ரான நஸி­ரி­யஹ்­ஹி­லுள்ள சிறைச்­சா­லையில் அவர்கள் அனை­வ­ருக் கும் மர­ண­தண்­டனை  நிறை­வேற்­றப்­பட்­டுள்ளது.

கடந்த செப்­டெம்பர் மாதம் 25 ஆம் திகதி அந்­நாட்டில் 42 தீவி­ர­வா­தி­க­ளுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட பின்னர் அங்கு இடம்­பெற்ற பாரிய மர­ண­தண்­டனை நிறை­வேற்­ற­மாக இது உள்­ளது.

ஈராக்­கா­னது கடந்த வரு­டத்தில் குறைந்­தது 88 பேருக்கு மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்­றி­யி­ருந்­தது. மேற்­படி மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­திற்கு மனித உரிமை குழுக்களும் சர்வதேச சமூகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஈராக்கில் பிடிபட்ட ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் உறுப்­பி­னர்கள் 38 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈராக்கில் பிடிபட்ட  ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் உறுப்­பி­னர்கள் 38 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. Reviewed by Madawala News on 12/16/2017 02:13:00 PM Rating: 5