Yahya

ஜனவரி 3 ஆம் திகதி உரத்தை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையும்.


ஜனவரி 3 ஆம் திகதி உரத்தை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையும் என விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் உரப்பிரச்சினை தொடர்பில்  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள உரப்பிரச்சினைக்கு தீர்வை பெற்று கொடுப்பதற்காக பாகிஸ்தானிடம் இருந்து உரத்தை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டது.

இதற்கமையவே குறித்த உரத்தை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 3ஆம் திகதி இரவு இலங்கையை வந்தடையும்.

இதனையடுத்து நாளோன்றுக்கு 3000 மெட்ரிக்தொன் உரத்தினை துறைமுகத்தில் இருந்து நேரடியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்காக பாகிஸ்தானில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உரம், திடீரென பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை.

இதனால் நாட்டில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன, பாகிஸ்தான் பிரதமருடன் கலந்துரையாடி குறித்த உரத்தினை நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.
ஜனவரி 3 ஆம் திகதி உரத்தை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையும். ஜனவரி 3 ஆம் திகதி உரத்தை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையும். Reviewed by Madawala News on 12/30/2017 10:17:00 AM Rating: 5