Yahya

(படங்கள்) ஏற்றுமதி செய்யப்பட இருந்த 542 கிலோ கிராம் போதைப் பொருள் சிக்கியது.


ஒரு வகையான போதைப் ​பொருளை ஏற்றுமதிச் செய்வதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து 542 கிலோ கிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தப் போதைப் பொருள், ​ செம்பியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, “கிறீன் டீ” என்னும் பெயரிலேயே ஏற்றுமதிச் செய்யப்படவிருந்தது.

அந்தப் ​போதைப் பொருள், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கே, அனுப்புவதற்கு தயார் செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு, நாகலகம் வீதியில் வைத்தே கைதுசெய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்ட 18 வயதான பெண், வெல்லம்பிட்டியைச் சேர்ந்தவ என்றும், 31 வயதான ஆண், களனியைச் சேர்ந்தவரென்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.




(படங்கள்) ஏற்றுமதி செய்யப்பட இருந்த 542 கிலோ கிராம் போதைப் பொருள் சிக்கியது. (படங்கள்) ஏற்றுமதி செய்யப்பட இருந்த 542 கிலோ கிராம் போதைப் பொருள் சிக்கியது. Reviewed by Madawala News on 12/21/2017 09:40:00 AM Rating: 5