Yahya

இம்முறை தேர்­தலில் 71 ஆயிரம் வேட்­பா­ளர்கள் : இது உலக சாதனை .


(எம்.எப்.எம்.பஸீர்,எம்.எம்.மின்ஹாஜ்)

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் 71 ஆயிரம் வேட் பா­ளர்கள் போட்­டி­யிட களத்தில் குதித்­துள்­ளனர். இது ஜன­நா­ய­கத்தின் ஆர்­வத்­தையே எடுத்து காட்­டு­கின்­றது. இதன்­படி 71 ஆயிரம் வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­யமை பெரும் சாத­னை­யாகும். இது உண்­மையில் கின்னஸ் சாதனை படைத்­தி­ருக்கும் என மின்­வலு மற்றும் மீள்­புத்­தாக்க பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரி­வித்தார்.

நீதி­யான தேர்­தலை நடத்த ஐக்­கிய தேசியக் கட்சி தயா­ராக உள்­ளது. எமது கட்­சியின் வேட்­பா­ளர்கள் தேர்தல் விதி­மு­றை­களை முழு­மை­யாக பாது­காப்பர் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அர­சியல் கட்சி செய­லா­ளர்­களை தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வர்கள் மஹிந்த தேசப்­பி­ரிய நேற்று இரா­ஜ­கி­ரி­ய­வி­லுள்ள தேர்தல் ஆணைக்­கு­ழுவில் சந்­தித்து பேசினார். இதன்­பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மாகாண சபை தேர்­தலை பெற்­றதே பெரும் வெற்­றி­யாகும். ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­து­வதில் அனை­வரும் பெரும் ஆர்­வத்­துடன் உள்­ளனர். இந்த தேர்­தலில் 71 ஆயிரம் வேட்­பா­ளர்கள் தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்­ளனர். 150 இலட்சம் வாக்­கா­ளர்கள் உள்ள நாட்டில் 71 ஆயிரம் பேர் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது ஜன­நா­யத்தின் ஆர்­வத்­தையே எடுத்து காட்­டு­கின்­றது.

 எனவே வேட்­பாளர் எண்­ணிக்கை கின்னஸ் சாதனை படைத்­தி­ருக்க வேண்டும். கிராம மட்­டத்தில் உள்ள ஜன­நா­ய­கத்தில் எமது நாடு எந்த இடத்தில் உள்­ளது என்­ப­தனை தேடி பார்க்­கு­மாறு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரிடம் நான் கோரினேன். அத்­துடன் 71 ஆயிரம் வேட்­பா­ளர்கள் என்­பது சாதா­ர­ண­மான விட­ய­மல்ல. இது கின்னஸ் சாதனை என்றே கூற வேண்டும்.

பொறுப்­பு­வாய்ந்த கட்சி என்ற வகையில் நீதி­யான தேர்­தலை நடத்த தயா­ரா­கி­யுள்ளோம். பாரிய கட்சி என்ற வகையில் முன்­னு­தா­ர­ண­மாக செயற்­ப­டுவோம். ஒழுக்­க­வி­ய­லுடன் கூடிய வேட்­பா­ளர்­க­ளையே இணைத்து கொண்­டுள்ளோம். தேர்தல் விதி­மு­றை­களை வேட்­பா­ளர்கள் பாது­காக்க வேண்டும். எமது கட்­சியின் 10 ஆயிரம் வேட்­பா­ளர்கள் தேர்தல் விதி­மு­றை­களை பாது­காப்பர்.

ஒரு கட்­சிக்கு வட்­டா­ரத்தில் ஒரு காரி­யா­ய­லமே நிறு­வு­வ­தற்கு தீர்­மா­னித்தோம். வீட்டு கடன் வழங்கும் நட­வ­டிக்­கை­களை கைவிட தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. சமுர்த்தி சங்­கத்தின் கூட்­டங்கள் தேர்தல் காலங்­களில் நிறுத்த வேண்டும். இதற்கு மீறி செயற்­பட்டால் கடு­மை­யான சட்டம் பாயும். ஐக்­கிய தேசியக் கட்சி பாரிய வெற்­றிக்­கொள்வோம். ஜன­நா­யக விதி­மு­றை­களை பாது­காத்து வெற்­றி­யிட்­டுவோம்.

 சுவ­ரோட்­டி­களை முற்­று­மு­ழு­தாக தடை செய்ய தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. மோச­டி­கா­ரர்கள் வேட்­பா­ளர்கள் பட்­டி­யலில் இருந்தால் அவர்­களை இணங்­கண்டு வாக்­கா­ளர்­க­ளுக்கு இனங்­காட்ட வேண்­டி­யது ஊட­கங்­களின் பொறுப்­பாகும்.

விசேட பிர­சார திட்டம் தயா­ரித்­துள்ளோம். கிராம மட்­டத்தில் கூட்டங்கள் நடத்துவோம். பாரிய கூட்டங்களை விடவும் கிராம மட்டத்தில் கூட்டங்களுக்கு அதிக அவதானம் செலுத்தியுள்ளது. கிராம வேட்பாளர் தகைமையற்றவர்களாயின் தேர்தலில் தெரிவாக மாட்டார்கள். கிராம மட்டத்தில் ஆதரவினை பெற நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.
இம்முறை தேர்­தலில் 71 ஆயிரம் வேட்­பா­ளர்கள் : இது உலக சாதனை . இம்முறை  தேர்­தலில் 71 ஆயிரம் வேட்­பா­ளர்கள் : இது உலக சாதனை . Reviewed by Madawala News on 12/28/2017 12:30:00 PM Rating: 5