Yahya

அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்தவர்கள் 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ..


75 ரூபாவை விட கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்த 200 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார தலைவர் கபில யகந்தலாவ தெரித்துள்ளார்.
கொழும்பிலும் புறநகர் பகுதியிலும் சுற்றிவளைப்பு பணிகள் இடம்பெற்றதாகவும் சுற்றி வளைப்பு நடவடிக்கை தொடரும் என்றும் அதிகார சபைத்தலைவர் கூறினார். 
ஒரு தேங்காயின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 75 ரூபாவாகும் என தெங்கு  செய்கை சபையின் தலைவர் கபில யகந்தலாவ தெரித்துள்ளார். 
கூடுதலான விலையில் தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் சுற்றி வளைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது 
ஒரு தேங்காய் தற்சமயம் 40 ரூபாவுக்கு 45 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையாளர்கள் மிகக் கூடுதலான விலையில் மிகவும் கூடுதலான லாபத்தை ஈட்டுவதனால் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 
அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்தவர்கள் 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ..  அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்தவர்கள் 200 பேருக்கு  எதிராக சட்ட நடவடிக்கை .. Reviewed by Madawala News on 12/14/2017 11:37:00 PM Rating: 5