Kidny

Kidny

இந்த தேர்தலில் நல்லாட்சிக்கு வாக்களிப்பது இலங்கை முஸ்லிம்களின் தலையாய கடமையாகும்..!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்களை நிராகரித்து விட்டு, அவசர அவசரமாக எம்மால் கொண்டுவரப்பட்ட
ஜனாதிபதி மைத்ரி அவர்களும் இந்த நல்லாட்சியும் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை பார்ப்போம் !?

#ஆட்சி அமைக்கப்பட்டு நூறுநாள் திட்டத்தில் குறிப்பிட்டது போன்று மத நல்லிணக்க சட்டத்தை கொண்டு வந்து முஸ்லிம்களின் தன்மானத்தை பாதுகாத்தனர் !

#ஞானசாரா அவர்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் நேரடியாக சந்திப்பதை ஜனாதிபதி தவிர்த்து வந்தார் !

#வக்குறுது அளித்தது போன்று ஞானசாரா அவர்களை கைது செய்து நாய்க் கூண்டில் அடைத்தனர் !

#தம்புள்ள பள்ளிவாசலுக்கு 80 பேர்ச் காணியும் புதிய பள்ளிவாசலும் கட்டித்தந்தனர் !

#அதேபோன்று கிராண்பாஸ், தெஹிவலை, மஹியங்கனையில் உள்ள பள்ளிவாசல்களை திறந்து விட உத்தரவிட்டார்கள் !

#தங்களுடைய  ஆட்சியில் எந்த இனக்கலவரங்களும் ஏற்படாமலிருக்க பாதுகாப்புத் தந்தனர்!

# இந்த ஆட்சியில் எந்த ஒரு முஸ்லிம்களின் கடைகளும் இனவாதிகளினால் எறிக்கப்படாமலிருக்க பார்த்துக்கொண்டனர்...!

#அப்படித்தான் ஒன்று இரண்டு எறிக்கப்பட்டிருந்தாலும் அது "கரண்சோட்" என்று அவருடைய பொலிசாரை வைத்து கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தனர்..!

#அளுத்கம பிரச்சினைக்கு விசாரணை நடத்தி தீர்வை பெற்றுத்தந்ததோடு  அளுத்கம பிரச்சினையின் சூத்திரதாரிகளை இனம்கண்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தனர்..!

#மரிச்சிக்கட்டியை இனவாதிகள் வில்பத்து வனாந்திரம் என்று கூறிய போதும், அதன் உண்மைத்தன்மையை அறிந்து அதனைச் செய்யாது விட்டார்கள்..!

#மாயக்கல்லில் இனவாதிகள் சிலை வைத்தபோது அதனை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார்கள்..!

#கண்டி பள்ளிவாசல் மினாரா பிரச்சினை வந்தபோது அதனைக் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்...!

#வட்டமடு காணிப்  பிரச்சினையை அறிந்து உடனடியாக அந்த விடயத்தில் தலையிட்டு அதனை மீட்டுக்கொடுத்தார்கள்...!

#கட்டார் பயணத்தை முடித்து வந்த கையோடு, மாடுகளை ஏற்றிச் செல்லுவதற்கு இருந்த தடையை நீக்கினார்கள்...?

#அண்மையில் காலி கிந்தோட்டை நகரில் நடக்கவிருந்த ஒரு இனக்கலவரத்தை தனது கட்டுப்பாட்டிலுள்ள பொலிசாரையும், விசேட அதிரடிப்படையினரையும் உடனே களத்துக்கு அனுப்பி பாதுகாப்பு வழங்கினார்கள்..?

#அதையும் மீறி நடந்த சில அசம்பாவிதங்களுக்கு கடும் கண்டனத்தையும், தனது ஆழ்ந்த கவலையையும் தெரிவித்தார்கள்..!

#அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களையும், நஸ்டஈடுகளையும் வழங்கினார்கள்..!

#இப்படி எவ்வளவோ விடயங்களை முஸ்லிம் சமூகத்துக்காக செய்தது மட்டுமல்ல, யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கும் கடும் உதவியும் செய்து வருகின்றார்கள்...!

#எங்கள் சமூகம் சார்ந்த முஸ்லிம் தலைவர்களை அடிக்கடி சந்தித்து இன்னும் உங்களுக்கு என்ன தேவையுள்ளது என்று கேட்டு வருகின்றார்கள்..!

#முஸ்லிம் மக்களினால்தான் நாம் ஆட்சிக்கு வந்தோம் என்று அடிக்கடி கூறி தங்கள் நன்றி மறவா தண்மையை நிரூபித்து வருகின்றார்கள்..!

இப்படிப்பட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை கௌரவபடுத்தும் முகமாக எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம்கள் அனைவரும் அவர்களுடைய கட்சிகளுக்கே   வாக்களித்து நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்பதே எங்களின் அவாவாகும்...!

குறிப்பு:- இந்தக் கட்டுரை ஞாபக மறதிக்காரர்களுக்கும்,கோமாளிகளுக்கும் சமர்ப்பணமாகும்...!

எம். எச். எம் . இப்ராஹிம் 
கல்முனை ..
இந்த தேர்தலில் நல்லாட்சிக்கு வாக்களிப்பது இலங்கை முஸ்லிம்களின் தலையாய கடமையாகும்..!  இந்த தேர்தலில் நல்லாட்சிக்கு வாக்களிப்பது இலங்கை முஸ்லிம்களின் தலையாய கடமையாகும்..! Reviewed by Madawala News on 12/08/2017 12:03:00 AM Rating: 5