Yahya

9 வயது சிறுவன் கயிற்றில் சிக்கி கழுத்து இறுகி உயிரிழந்த சோகம். #திருகோணமலை


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில் பதவிசிறிபுர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் 09 வயது சிறுவன் கயிற்றில் சிக்கி கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (30) இடம் பெற்றுள்ளது.

பதவிசிறிபுர ஜயந்திவெவ என்ற இடத்தைச்சேர்நத 4ம் ஆண்டு கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதேஇடத்தைச்சேர்ந்த டபிள்யூ.ஏ.தேவிந்த மதுஷான் வீரதுங்க (09 வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது வீட்டுக்கு முன்னாள் சிறிய கூலான் மரம் இருப்பதாகவும் அம்மரத்தில்  முகத்தை மூடிக்கொண்டு   விளையாட்டாக ஏறியதாகவும் அம்மரத்தில் காணப்பட்ட னைலோன் கயிறு கழுத்தில் சிக்கி கழுத்து இறுகியதாகவும் அதனால் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு கெப்பித்திகொள்ளாவ நீதிமன்ற நீதவான் வருகை தந்து பார்வையிட்டதாகாகவும் சடலத்தை சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் கட்டளையிட்டார்.

இதேவேளை உயிரிழப்பு தொடர்பில் பதவிசிறிபுர பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 வயது சிறுவன் கயிற்றில் சிக்கி கழுத்து இறுகி உயிரிழந்த சோகம். #திருகோணமலை 9 வயது சிறுவன் கயிற்றில் சிக்கி கழுத்து இறுகி உயிரிழந்த சோகம். #திருகோணமலை Reviewed by Madawala News on 12/31/2017 10:39:00 AM Rating: 5