Yahya

மாபெரும் கல்வி மற்றும் கலைக் கண்காட்சி குருநாகலை, மடிகே மிதியால மண்ணில்.



வடமேல் மாகாணம், குருநாகலை மாவட்டம், மடிகே மிதியால, அல்-ஹுதா கழகம் ஏற்பாடு செய்யும் மாபெரும்
கல்விக் கண்காட்சியும் கலை விழாவும் இம்மாதம் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மடிகே மிதியால, பண்டார கொஸ்வத்த மண்ணில், திறந்த வெளியரங்கில்...

கல்வி, வியக்க வைக்கும் முத்தமிழின் கலை இலக்கியம் அம்சங்கள், கலாசாரம், ஆன்மீகம், சுகாதாரம், விவசாயம், புராதன சின்னங்களும் அடையாளங்களும், ஊடகத்துறை சார் அறிவு, மிருகக்காட்சி சாலை, புராதன விளையாட்டுக்கள், சிறுவர்களை களிப்பூட்டி மகிழவைக்கும் விளையாட்டுத் திடல்கள், விஞ்ஞானம், தொழில் நுட்பம், அதிசயிக்க வைக்கும் மாயாஜால வித்தைகள், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலக சாதனையாளர்களின் மிரளவைக்கும் சாகசங்கள், இலங்கை இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களின் காட்சிக்கூடங்கள் அத்தனையையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் அளவிலா காட்சித் தொகுப்பு...

யார் மனதில் யார்? உங்கள் மனதில் யார்? கேட்டுப்பார்க்கலாம் வாருங்கள் உங்கள் அபிமான கிரேன்ட் மாஸ்டர் உங்களோடு நேரடியாக, மடிகே மிதியால கல்வி மற்றும் கலைக் கண்காட்சி மேடையில்...

மற்றும் கண்காட்சியின் இடையே அவ்வப்போது ஒவ்வொரு  மணித்தியாலத்திலும் மாணவ மாணவிகள், பெண்களுக்காக நடைபெறும் உளவியல் மற்றும் வழிகாட்டல் ஆலோசனை கூடங்களுடன் இணைந்து  பெறுமதிமிக்க விரிவுரைகள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவும்...

சொல்லப்படாத இன்னும் பல புதுமைகளையும் அன்றே வந்து பார்த்து பூரிப்படையவும் குடும்ப சகிதம் வாருங்கள்.

நீங்கள் இலங்கையில் எங்கிருந்த போதிலும் உங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர உங்களுக்கு களம் அமைத்துத்தர காத்திருக்கிறார்கள், இது உங்கள் திறமைக்கான அரிய வாய்ப்பு,
·         நீங்கள் பன்முகத் திறமை கொண்டவரா?
·         பாடகரா?
·         விஷேட வித்தகரா?
·         சாகசக் கலைஞரா?
·         மாயாஜால வித்தகரா?
·         விஷேட குழுத் திறமையானவரா?
·         தனித்துவமான திறமை கொண்டவரா?
அப்படியாயின் இம்மாதம் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் உங்கள் திறமைகளை மேடையேற்ற, களம் தரக் காத்திருக்கிறார்கள் மடிகே மிதியால அல்-ஹுதா அமைப்பு,
உங்கள் பதிவுகளுக்கு இன்றே அழையுங்கள், +94 773 440 801
#அறிவு, அனுபவம், சுவாரஷ்யம், பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைந்து மிகவும் பிரமாண்டமான அனுபவங்களை பெற்றுக்கொள்ள உங்கள் அனைவரையும் ஆத்மார்த்தமாக வருக வருக என அழைக்கிறோம்.

தகவல்:
R.M சாஜித் (B.A.)
ஊடகப்பிரிவு,
அல்-ஹுதா கழகம்,
மடிகே மிதியால.
v  இது சமுக நலம் கொண்டதோர் வேலைத்திட்டம். Ò
--
A.H.M RILWAN.
BACHELOR OF ARTS,
SPECIALIZATION IN SOCIOLOGY,
SOUTH EASTERN UNIVERSITY OF SRI LANKA.
மாபெரும் கல்வி மற்றும் கலைக் கண்காட்சி குருநாகலை, மடிகே மிதியால மண்ணில். மாபெரும் கல்வி மற்றும் கலைக் கண்காட்சி குருநாகலை, மடிகே மிதியால மண்ணில். Reviewed by Madawala News on 12/23/2017 05:42:00 PM Rating: 5