Kidny

Kidny

நவ நாகரிகத்துக்காக கிழிந்த ஜீன்ஸ் ஆடை அணியும் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வது தேசிய கடமை. சட்டத்தரணி நபிஹ்ல் வாஹ்ஷ்.


நவநாகரிகத்துக்காக கிழிந்த ஜீன்ஸ் ஆடை அணியும் பெண்களுக்கு தண்டனையாக அவர்களை
பாலியல் வல்லுறவுக் குட்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த எகிப்திய சட்டத்தரணியொருவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட் டுள்ளது.

அத்துடன் நபிஹ்ல் வாஹ்ஷ் என்ற மேற்படி சட்டத்தரணிக்கு அவரது வன்முறையைத் தூண்டிவிடும் பொறுப்பற்ற விமர்சனத்துக்காக சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 20,000 எகிப்திய பவுண் (1,130 அமெரிக்க டொலர்) தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

விபசாரத்திற்கு எதிரான சட்ட வரைபு குறித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டவிவாதநிகழ்ச்சியின்  போது நபிஹ்மேற் படிவிமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.

"யுவதி ஒருவர் தனது பின் பாகத்தின் அரைப் பகுதி வெளியே தெரிய வீதியில் நடந்தால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களா?" என அந்நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பிய நபிஹ்,

 "அவ்வாறு நடந்து செல்லும் யுவ திகள் தொடர்பில் நான் கூறுவது என்ன வென்றால், அத்தகைய யுவதிகள் மீது பாலியல் ரீதியான தாக்குதலை நடத்துவது தேசப்பற்றுள்ளவர் ஒருவரது கடமையா கவுள்ள அதேசமயம் அத்தகையவர்களை பாலியல்  வுக்குட்படுத்துவது தேசிய கடமையாகும்" எனத் தெரி வித்திருந்தார்.

"நவநாகரிகம் கருதி கிழிந்த ஆடை  அணியும் பெண்கள் தம்மை பாலியல் துஷ்பிரயோகம் செய் வதற்கு ஆண்களு க்கு வரவேற்பளிக்கின்றனர்" என அவர் மேலும் கூறினார்.

அவரது மேற்படி  விமர்சனமானது பொது மக்கள் மத்தியிலும் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் கடும் சினத்தை ஏற்படுத்தியிருந்தது.

நபிஹறின் விமர்சனம் பாலியல் வல்லுறவு மற்றும் வன்முறையை தூண்டுவதாகவுள்ளதுடன் எகிப்திய அரசியலமைப்பிலுள்ள அனைத்து பிரிவுகளையும் மீறும் செயற்பா டாகவும் உள்ளது எனத் தெரிவித்து அந் நாட்டு தேசிய பெண்கள் உரிமைகள் சபை வழக்குத் தாக்கல் செய்திருந்தது.


இந்நிலையில் மேற்படி வழக்கை விசா ரித்த நீதிமன்றம் அவருக்கு 3 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நபிஹ் இதற்கு முன்னர் பிறிதொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் இஸ்ரேலியர் எவரையாவது பார்த்தால் அவரைக் கொல்வேன் எனத் தெரிவித்து பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

அத்துடன் அவர் கடந்த ஒக்டோபர் மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பெண்கள் முக்காடு அணியத் தேவையில்லை எனக் கருதுவதாக கருத்து வெளியிட்டிருந்த மதகுரு ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

நவ நாகரிகத்துக்காக கிழிந்த ஜீன்ஸ் ஆடை அணியும் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வது தேசிய கடமை. சட்டத்தரணி நபிஹ்ல் வாஹ்ஷ். நவ நாகரிகத்துக்காக கிழிந்த ஜீன்ஸ் ஆடை அணியும் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வது தேசிய கடமை. சட்டத்தரணி நபிஹ்ல் வாஹ்ஷ். Reviewed by Madawala News on 12/04/2017 09:55:00 AM Rating: 5