Kidny

Kidny

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதிகளில்... பஸ்களிடையே போட்டி: அச்சத்தில் பயணிகள்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதிகளில் செல்லும் தனியார், அரச பஸ்களின் போட்டி காரணமாக,
அதிக வேகத்தால், வீதிச் சமிக்ஞைகளைக்   கடைப்பிடிக்காத சாரதிகளால் பயணிகள் விபத்து அபாயத்தை எதிர்நோக்குவதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.


இவ்வீதிகளில் தனியார் மற்றும் அரச பஸ்கள் சில நிமிடங்கள் வித்தியாசத்திலேயே பஸ் நிலையங்களில் இருந்து புறப்படுகிறது. எனவே, பயணிகளை அதிகமாக ஏற்றுபவர்கள் யார் என்ற போட்டியில் சாரதிகள் செலுத்துவனால், அவ்வீதிகளில் பயணிக்கும் பயணிகள் விபத்துகளுக்கு ஆளாகி மரணத்தைத் தழுவுகின்றனர்.

இவ்வாறு சராசரியாக நாள் ஒன்றுக்கு மூன்றுக்கு அதிகமான விபத்துகள் திருகோணமலை மாவட்டத்தினுள் மாத்திரம் இடம்பெறுவதாகவும் இவர்கள் சிகிச்சைக்காக திருகோணமலை மூதூர், கிண்ணியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள் எனவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான விபத்துகள் அதிகமாக கிண்ணியா - மூதூர் பிரதான வீதிகளிலேயே இடம்பெறுகின்றது. இப்பகுதிகளில் அதிகமான மணல் ஏற்றும் டிப்பர் லொறிகள், பஸ்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவே, இவ்வாறு அதிகமாக விபத்துகளுக்கு முகங்கொடுப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான இடங்களில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகள் மிகவும் குறைவாகவே இருப்பதும் இவ்விபத்துக்களுக்கான காரணமாக அமைகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதிகளில்... பஸ்களிடையே போட்டி: அச்சத்தில் பயணிகள். திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதிகளில்... பஸ்களிடையே போட்டி: அச்சத்தில் பயணிகள். Reviewed by Madawala News on 12/06/2017 02:39:00 PM Rating: 5