Yahya

ரமலான் பண்டிகையில் பிரியாணி சாப்பிடாதோர் எவரும் இல்லை.


-எம்.எம்.மின்ஹாஜ்-
தைப்பொங்கல் தினத்தை இந்துக்கள் மாத்திரம் கொண்டாடுவதில்லை. மூவின மக்களும் கொண்டாடுகின்றனர். அதேபோன்று ரமழான் பண்டிகையின்  போது பிரியாணி சாப்பிடாத எவரும் இல்லை.

எனவே பெளத்த நாடாக இருந்தாலும் ஏனைய மதத்த வர்களுக்கும் அவர்களது காரியங்களை செய்ய இடமளிக்க வேண்டும். எனவே இன ஐக்கியத்தை கொண்டு நாம் உலக சாதனை படைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


அத்துடன் நாம் வெளிநாடுகளுடன் யுத்தம் செய்யவில்லை. எமது நாட்ட வர்களுடனே இன ரீதியாக பிளவுபட்டு யுத்தம் செய்தோம். எனவே தற்போது மூவின மக்களும் ஒன்றிணைந்து அனைத்து மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதனை சர்வதேசம் வரை எடுத்துச் சென்று முன்னுதாரணமான நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் எனவும் அவர் கோரினார்.


நத்தார் பண்டிகையை முன்னிட்டு 2016 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் துறைமுக அதிகார சபை ஊழியர்கள் நிர்மாணித்த நத்தார் மரம் கின்னஸ் சாதனை படைத்தமைக்கான சான்றிதழ் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடம் கையளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரை யாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உலகளவில் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். இதன்படி 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ணத்தை கைப்பற்றினார். இதன்மூலம் ஊடாக கிரிக்கெட்டின் நாம் உலகளவில் பிரசித்தம் பெற்றோம். அதன் மூலம் எம்மை உலகம் இனங்கண்டது.

அதுபோலவே தற்போது உலகின் பெரிய நத்தார் மரத்தின் ஊடாக கின்னஸ் சாதனை படைத்து இரண்டாவது சாதனை படைத் துள்ளார்.

இந்த நத்தார் மரம் காலி முகத்திடலில் நிர் மாணிக்கப்பட்டது. எனினும் இந்த இடம் ஆரம்ப காலப்பகுதியில் யுத்த முகாமாக இருந்தது. எனினும் அந்த இடத்தில் சமா தானத்திற்கான நினைவு சின்னமாக நத்தார் மரம் அமைக்கப்பட்டது. இந்த மரத்தை தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்களும் இணைந்தே நிர்மாணித்தனர். நத்தார் பண் டிகை இயேசு நாதரின் பிறந்த தின அனுஷ் டானமாகும். எனினும் கிறிஸ்தவர்கள் மாத்திரம் கொண்டாடாமல் அனைவரும் ஒன்றிணைந்தே இதனை கொண்டாடினர்.


இதுவே இலங்கையின் விசேட அம்ச மாகும். நான்கு மதங்களின் பண்டிகையை அனைத்து மதத்தவர்களும் கொண்டு கின்றனர். இந்த நாட்டில் யுத்தமொன்று இருந்தது. நாம் வெளிநாடுகளுடன் யுத்தம் செய்யவில்லை. எமது நாட்டின் இனத்த வர்களுடன் பிளவுபட்டு உள்நாட்டவர்களு டனே யுத்தம் செய்தோம்.

எனவே இன ஐக்கியம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை துறைமுக ஊழியர்கள் புரிந்து கொண்டு நத்தார் மரம் அமைத்து உலகில் சாதனை படைத்துள்ளனர். இது சமாதானத்திற்கான சாதனையாகும்.
இதன்படி அனைத்து மத அனுஷ்டானங் களையும் கலந்து கொண்டாடுகின்றோம். பெளத்த நாடாக இலங்கை இருந்த போதிலும் ஏனைய மதத்தவர்களுக்கும் அவர்களது காரியங்களை செய்வதற்கு இட மளிக்க வேண்டும்.


தைபொங்கல் தினத்தை இந்துக்கள் மாத்திரம் கொண்டாடுவதில்லை. மூவின மக்களும் கொண்டுகின்றனர். அதே போன்று ரமழான் பண்டிகையின் போது பிரியாணி சாப்பிடாத எவரும் இந்த நாட்டில் இல்லை. எனவே பெளத்த நாடாக இருந்தாலும் ஏனைய மதத்தவர்களுக்கும் தமது அவர்களது காரியங்களை செய்ய இடமளிக்க வேண்டும். எனவே இன ஐக்கியத்தை கொண்டு நாம் உலக சாதனை படைக்க வேண்டும். எனவே இன ஐக்கியத்தை சர்வதேசம் வரை எடுத்து சென்று இலங்கையை முன்னுதாரணமான நாடாக மாற்றியமைக்க வேண்டும் என்றார்.
Image may contain: 5 people, people smiling, people standing

ரமலான் பண்டிகையில் பிரியாணி சாப்பிடாதோர் எவரும் இல்லை. ரமலான் பண்டிகையில் பிரியாணி சாப்பிடாதோர் எவரும் இல்லை. Reviewed by Madawala News on 12/14/2017 12:34:00 PM Rating: 5