Kidny

Kidny

இலங்கைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் வீதிவிபத்துக்கள்.


ஏ.பீ.எம்.அஸீம்.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு வீதிக் கட்டமைப்புக்கள் சீராக இருப்பது அவசியம் .அதனூடாகவே
நகரங்கள் தொடக்கம் கிராமங்கள்வரை தங்குதடையின்றி அபிவிருத்தியை கொண்டுசெல்ல முடியும்.

இலங்கையில் கடந்த 30 வருடகால யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் பாதிப்படைந்த வீதிகள் புனரமைக்கப்பட்டதோடு, குறுகிய,நெடுந்தூரமான  பல வீதிகள்  மக்களின் போக்குவரத்து வசதிகருதி புதிதாக உருவாக்கப்பட்டன.

வளர்ந்த நாடுகளில் காணப்படுகின்ற வீதிகளைப்போன்று இலங்கையிலும் காபட் வீதிகள் கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வீதிகளால்  மக்கள் எந்தளவுக்கு பயனை அடைகிறார்களோ அதேபோல்,கவனயீனம் காரணமாக  சிலவேளை வீதிவிபத்துக்கள்மூலம் உடல் ,உயிர் பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றார்கள்.

நாம் இன்று நாட்டில் அதிகமாக கேள்விப்படும் விடயம் வீதிவிபத்துப் பற்றிய செய்தியாகவே உள்ளது. யுத்தகாலத்தில் துப்பாக்கிகளாலும் ,குண்டுவெடிப்புக்களாலும் ஏற்பட்ட அதே உயிரிழப்பு வீதி விபத்துக்களால் தற்போது இழக்கப்படுகின்றன.சராசரியாக ஒருநாளைக்கு 6-8 பேர் வரையில் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இவ் விபத்துக்களில் பெரிதும் உயிரிழப்பவர்கள் 18-35  வயதுக்குட்பட்ட வாலிபர்கள் என்பது கவலையான செய்தி.

வீதி சமிக்ஞைகள் ,போக்குவரத்து சட்டதிங்கள் ,குடிபோதையில் வாகனத்தை செலுத்துதல் ,வாகனம் செலுத்தும்போது தொலைபேசிப் பாவனை போன்றவற்றினாலேயே அதிகமான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

மோட்டார் சைக்கிள் ,ஆட்டோ போன்ற  வாகனங்களைச் செலுத்தும் ஒவ்வொருவரும்   மிக அவதானமாக செல்வதன் அவசியத்தை உணர்ந்து செயற்படுவது அவசியம்.அதிகமான விபத்துக்களுக்கு இவ்வகை வாகனங்களே காரணமாகின்றன.

யுத்தகாலத்தில் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலைமை காணப்பட்டதைப்போல் இன்று வாகனப் போக்குவரத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரினதும் உயிருக்கும் உத்தரவாதமில்லாத சூழல் காணப்படுகிறது.

வீதி விபத்துக்களைத் தடுப்பதும்,வீதிச் சட்டங்களை அவதானிப்பதும் போக்குவரத்து போலீசாரின் கடமை.அவர்களுக்கு ஒத்துழைப்பது  பாதசாரிகள் ,வாகன சாரதிகள் அனைவரதும் பொறுப்பாகும்.இதை மீறிச் செயற்படும்போது விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளதை மறுக்கமுடியாது.

நாட்டின் முதுகெழும்பாக பார்க்கப்படும் இளைஞர்கள் ஒவ்வொருவரினதும் உயிர்கள்  பெருமதியானது.இதை தாங்களாகவே உணர்ந்து மிக அவதானமாக வாகனங்களைச் செலுத்துவதன்மூலம் உயிர் பாதுகாப்பை உறுதிசெய்வோம்.
இலங்கைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் வீதிவிபத்துக்கள். இலங்கைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் வீதிவிபத்துக்கள். Reviewed by Madawala News on 12/04/2017 06:53:00 AM Rating: 5