Yahya

மதிப்புக்குரிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு இதுக்கு பதில் தருவீர்களா?

அல்-மிஸ்பா
அட்டாளைச்சேனை-01
அமைப்பாளர்: ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
மத்திய குழு அட்டாளைச்சேனை.


அஸ்ஸலாமு அலைக்கும்:

மதிப்புக்குரிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு இதுக்கு பதில் தருவீர்களா?

அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் கோட்டையாக முகவரி பெற்று இன்றுவரை கட்சியைப் பாதுகாத்து வரும் ஊராகவே இருந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அட்டாளைச்சேனையில் இயங்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் மத்திய குழுவான நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் நடவடிக்கைகளால் நாளுக்கு நாள் கட்சியை விட்டு மூத்த போராளிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே நீங்கள் இதன் காரணம் ஏன் எதனால் வெளியாகிறார்கள் என்று கேட்டிருக்கிறீர்களா? அல்லது அதற்கான தீர்வுதான் என்ன என்றாவது பார்த்திருக்கிறீர்களா? எதுவும் இல்லையென்றால் யார் விலகிச் சென்றாலும் பறவாய் இல்லை உங்கள் பொக்கட்டுக்கள் நிறைந்தால் போதும் என்றிருக்கிறீர்களா.? பதில் தருவீர்களா?

உதாரணமாக இன்று கட்சியின் காவலர்களாக அன்று தொட்டு இன்றுவரை எந்த பிரயோசனமும் இல்லாமல் உரிமை என்ற ஒன்றுக்காக அன்று மறைந்த எம் பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் குரலுடன் இணைந்த மக்களின் அபிலாசைகளை அட்டாளைச்சேனையில் கட்சிக்குப் பொறுப்பாக இருந்த நீங்கள் அனுவளவு கூட செய்து கொடுத்தீர்களா.? அல்லது அவர்களை அவர்களின் பிள்ளைகளை அழைத்து பேசினீர்களா.?
அது சம்மந்தமாக இதுவரை யோசித்துள்ளீர்களா.?
அல்லது அதுக்கும் உங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்று இருக்கிறீர்களா? இதுக்கு என்ன பதில் சொல்வீர்கள்.


அட்டாளைச்சேனையில் 17 பிரிவுகள் உள்ள நிலையில் இதுவரை எந்தப்பிரிவிலேனும் நீங்கள் நேரடியாகச் சென்று அங்குள்ள தேவைகளைப் பார்த்திருக்கிறீர்களா?. அல்லது எந்தப் பிரிவிலாவது ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்த்துவைத்துள்ளீர்களா.?
அது சம்மந்தமாக குறித்த பிரிவு மக்களைச் சந்தித்தேனும் பேசுயுள்ளீர்களா.?
மத்திய குழு இதுக்குப் பதில் தருவீர்களா.?

அட்டாளைச்சேனை கோணாவத்தை என்னும் பகுதியிலேயே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் ஆரம்பகால போராளிகள் குறிப்பாக கட்சிக்காக உயிர்த்தியாகம் உடமைகள், சொத்துக்களை இழந்தவர்கள் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா.?
அது சம்மந்தமாக இதுவரை அவர்களுக்கு ஏதும் உதவிகள் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளீர்களா.?
கட்சிக்காக பல வருடங்கள் குடும்ப நிலை மறந்து வழக்குப் பேசிய அதாவது மறைந்த தலைவரின் நேரடிப் பாதுகாப்பில் இருந்து வழக்குப்பேசிய அக்கிராம கட்சிப் போராளிகளின் ஒருவரின் பிள்ளைக்கேனும் இதுவரை இந்த மத்திய குழுவால் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா.?

அல்லது அவர்களில் ஒருவரையேனும் கட்சியில் இணைத்துப் பார்த்திருக்கிறீர்களா?


அதே கிராமத்தில் அமைந்துள்ள அந்த ஆயுர்வேத வைத்தியசாலைக்கு பல நியமனங்கள் வழங்கிய நீங்கள் அக்கிராமப் போராளிகளின் மக்களை புறக்கணித்தமை பெருந்துரோகமாக உங்களுக்கு விளங்க வில்லையா?
இதுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்.

அது போன்று மறைந்த தலைவரின் காலத்தில் இருந்து கட்டிக்காத்து வந்த கட்சிப்போராளிகள் தைக்கா நகரில் பல எதிர்ப்புக்களையும் தாண்டி அங்கு பலரை கட்சி உள்வாங்கியிருந்த நிலையில் இன்றுஅவர்களை கண்டு கொள்ளாமல் புறக்கணித்து விட்டவர்கள் யார். அன்று கட்சியின் வேட்பாளர்களாக இருந்த அதிபர் அன்வர் தொடக்கம் கைறுதீன் வரை கைவிட்டுள்ள நீங்கள் மர்ஹூம் நாகூர்ப்பிச்சை அவர்களின் பிள்ளைகளையேனும் கட்சிக்குள் வைத்துள்ளீர்களா.? அவர்களின் அர்ப்பணிப்புக்களையேனும் ஞாபகம் வைத்துள்ளீர்களா?


கட்சிக்காறர்களுக்கு நீங்கள் வழங்கும் மதிப்பும் மரியாதையும் அதிபர் அன்வர் அவர்களின் விடயத்தில் நீங்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பில் அவர் இன்று ஆத்திரமாக கட்சியும் கடப்படியும் என்று தூக்கிவீசிவிட்டு ஊரை விட்டே வெளியாகிச் சென்று வெளிமாவட்ட பாடசாலை ஒன்றில் அதிபராக பதவியேற்றுள்ளார். இதுக்கு என்ன பதில் சொல்லவுள்ளீர்கள்.


இப்படி இன்னும் இன்னும் எத்தனை விடயங்களை எடுத்துக் கூறலாம்.
உதாரணமாக அன்று மறைந்த தலைவர் இருக்கும் காலத்தில் அட்டாளைச்சேனை மத்திய குழு பாகுபாட்டுடன் நீதியின்றி செயற்படுவதாக குற்றம் சுமத்தி இன்றய அரசியல் மேதையாக இருக்கும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை தலைமையில் கோணாவத்தைக்கு என்று இரண்டாவது மத்திய குழுவை உருவாக்க சந்தர்ப்பம் வழங்கியது இன்று ஞாபகத்துக்கு வருகிறதா? மீண்டும் அப்படியான இன்னும் ஒரு மத்திய குழு உருவாக்க சந்தர்ப்பம் வழங்கும் நிலைக்கு நடந்து கொள்வது பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள்.

மேலும்:

கட்சியின் கடந்தகால தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குதல் தொடர்பில் இதுவரை மத்திய குழு கூலிக்கு மாராடிக்கும் கேவலத்தையே செய்து வரும் வேடிக்கையால் இன்னும் ஊருக்கான தேசியப்பட்டியல் கிடைக்காமல் இருக்கிறது. இதனை குழி தோண்டி புதைத்துக்கொண்டிருக்கும் உள்வீட்டு கறுப்பாட்டினை ஏன் கண்டு கொள்ளாமல் மத்திய குழு இருமுகங்களுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு பதில் தருவீர்களா..?


கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த பிரதேச சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் அன்றைய வேட்பாளராக இருந்த அதாவது இன்றைய அரபா வட்டார ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வேட்பாளர் ஆப்தீன் மற்றும் அவர் சார்ந்த கட்சிக்காறர்களின் அச்சுறுத்தல் காரணமாக  கட்சிக்காக கட்சியின் சார்பில் கோணாவத்தைப் பகுதியிருந்து யாரும் தேர்தல் கேட்க முன்வராத நிலையில் அன்று ஒரு துடிப்பான இளைஞனாக கட்சிக்குள் கட்சியின் கோணாவத்தை வேட்பாளராக களமிறங்கி சகல சவால்களையும் முறியடித்து தனது சொத்துக்களை முழுமையாக கட்சிக்காக செலவு செய்த இன்று உங்கள் மத்திய குழுவால் பெருந் துரோகமிளைக்கப்பட்டுள்ள எஸ்.எல்.முனாஸ் வெற்றியீட்டி கட்சிக்குப் பெருமை சேர்த்தது உங்களுக்குத் தெரியுமா?
அதுக்காக கட்சியால் அல்லது மத்தியகுழுவால் ஒரு ரூபாயேனும் பணம் செலவு செய்தீர்களா.? இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.


மேலும் அப்படி தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து தேர்தல் கேட்டு வெற்றியீட்டி மக்கள் விரும்பும் ஒரு சேவகனாக பொதுநலவாதியாக, சமூக சேவையாளனாக இருந்த முனாசுக்கு சாதுவாக அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏன் ஏனைய கட்சிக்காறர்களும் மதிக்கும் ஒருவராக அரபா வட்டாரத்துக்கு 100 வீதம் பொருத்தமானவராக இருந்த முன்னாள் உறுப்பினர் முனாசுக்கு சந்தர்ப்பம் வழங்காதது ஏன். இது சம்மந்தமாக மத்தியகுழு முனாசிடம் பேசினீர்களா? அல்லது அந்த மக்களிடம் அப்பிரிவுகளிலேனும் பேசினீர்களா..”?

அல்லது ஆசனப் பகிர்வுக்கு இலஞ்சம் பெற்றுக் கொண்டு கொடுத்தீர்களா?
என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்

அரபா வட்டாரத்தில் வாக்குரிமை இல்லாத ஒருவருக்கு அதிலும் பலரின் எதிர்ப்புக்கு மத்தியில் இருக்கும் ஒருவருக்கு அந்த அரபா வட்டாரத்தில் இடம் கொடுத்து அங்கிருந்த பழையவரை புறந்தள்ளியதன் மர்மம்தான் என்ன?


கட்சியின் தலைவரின் கட்டளையைக் கூட பொருட்படுத்தாது அப்படி செய்ததன் காரணம் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது இதுக்கு என்ன பதில் சொல்லபோகிறீர்கள்.


அத்துடன் தேர்தல் களம் இன்று சுத்த சூனியமாக கட்சி வீழ்ச்சிப் பாதையில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய குழு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது அமைதியாக இருப்பதன் மர்மம் என்ன.?

உடனடியாக மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் சுயநலவாதிகளான சிலரை தூக்கியெறிந்து விட்டு, பசையிருக்கும் பக்கம் ஒட்டிக்கொள்ளும் சிலரை அகற்றி மூத்த உறுப்பினர்களாக இருக்கும் சட்டத்தரணி  எஸ்.எம்.ஏ.கபூர் மற்றும் எஸ்.எல்.எம். பழீல் பீ.ஏ.போன்ற மூத்தவர்களுக்கு அந்த இடத்தினை வழங்க மாட்டீர்களா.?

எனவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைமை அட்டாளைச்சேனை மத்திய குழு விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய மத்திய குழுவை ஆரம்பித்து அரசியலைச் சரியாக செய்ய இடமளிக்க வேண்டும் என்பதே இந்த கடிதத்தின் முழுநோக்கமும் என்பதனைக் கூறி மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

கட்சிப்போராளி அல்-மிஸ்பா அட்டாளைச்சேனை.

அமு.அஸ்ஜாத்
மதிப்புக்குரிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு இதுக்கு பதில் தருவீர்களா? மதிப்புக்குரிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு இதுக்கு பதில் தருவீர்களா? Reviewed by Madawala News on 12/25/2017 02:42:00 PM Rating: 5