Kidny

Kidny

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பம்.


சிவனொளிபாதமலை பருவகாலம், பூரணை தினமான நேற்று (03) நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமானது.

பருவகாலத்தை ஆரம்பிக்கும் முகமாக, இரத்தினபுரி, பெல்மதுளை கல்பொத்தாவல ரஜமகா விகாரையில் வைக்கப்பட்டிருந்த சமன் தேவ விக்கிரமும் பூஜைப் பொருட்களும் தாங்கிய இரதபவனி, மலையடிவாரத்தை நேற்று மாலை வந்தடைந்தது.

அவிசாவளை, கினிகத்தேனை, ஹட்டன், நோர்வூட் மற்றும் மஸ்கெலியா வழியாக நல்லத்தண்ணி, சிவனொளிபாதமாலை அடிவாரத்தைச் சென்றடைந்தது.  

இதேவேளை, புனிதப் பொருள் தாங்கிய இரதபவனி, பலாங்கொடை- பொகவந்தலாவை வழியாவும் வருகைதந்தது. இரதபவனியையொட்டி, பிரதான வழிகளில் மூவின மக்களும் வழிபாடுகளில் ஈடுபட்டனர் என்துடன், தானங்களும் வழங்கினர்.
சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பம். சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பம். Reviewed by Madawala News on 12/04/2017 07:01:00 AM Rating: 5