Yahya

அக்பார் டவுன் , எடேறமுல்ல 2 என பெயர் மாற்றப்படுகிறது. அமைச்சர் பைசர் முஸ்தபா


இம்மாத ஆரம்பத்தில் மகர  பிரதேச சபையின் நான்கு கிராம நிலதாரி வட்டாரங்களை  சேர்த்து  அக்பார் டவுன் என பெயர் மாற்றப்பட்ட  பிரதேசம், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை அடுத்து  'எடேறமுல்ல 2'  என பெயர் மாற்றப்பட உள்ளதாக  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர்  முஸ்தபா தெரிவித்தார்.

பிரதேச மக்களின் கையொப்பங்களை சேர்த்து விஜயம் செய்த ''எடேறமுல்ல மக்கள் பாரம்பரியத்தை பாதுகாப்போம்'' என்ற அமைப்பு அமைச்சரை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்துள்ளதகவும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எடேறமுல்ல பிரதேசம் தேர்தல் தொகுதி பிரிப்பின் போது.  அக்பார் டவுன் என  பெயர் மாற்றம் செய்யபட்டதில் இருந்து பிரதேச மக்களால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டுவருவது குறிப்பிடத் தக்கது..
அக்பார் டவுன் , எடேறமுல்ல 2 என பெயர் மாற்றப்படுகிறது. அமைச்சர் பைசர் முஸ்தபா அக்பார் டவுன் , எடேறமுல்ல 2 என பெயர் மாற்றப்படுகிறது. அமைச்சர் பைசர்  முஸ்தபா Reviewed by Madawala News on 12/20/2017 08:48:00 PM Rating: 5