Yahya

முஸ்லிம் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட சிரேஷ்ட உறுப்பினர் அனஸ் கட்சியில் இருந்து விலகினார்.


எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின்போது மல்­ல­வ­பிட்டி பிர­தேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பிர­தான வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டுவார் என எதிர்­பார்க்­கப்­பட்ட சிரேஷ்ட உறுப்­பினர் எம்.ஜே. அனஸ் அக்­கட்­சி­யி­லி­ருந்து வில­கி­யுள்ளார்.

நேற்று முன் தினம் இரவு, குரு­ணாகல் நகரில் இடம்­பெற்ற விசேட சந்­திப்பொன்றின்போது கட்­சியில் தனக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­களை சுட்­டிக்­காட்­டிய போது, கருத்து முரண்­பா­டு கள் ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மல்­ல­வ­பிட்டி பிர­தேச சபைத் தேர்­தலில் போட்­டி­யிட இம்­முறை சிரேஷ்ட உறு­பினர் எம்.ஜே. அன­ஸுக்கு அனு­ம­தி­ய­ளிப்­ப­தில்லை என தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அவர் இவ்­வாறு கட்­சியில் இருந்து வெளி­யே­றி­யுள்ளார்.

இது தொடர்பில் எம்.ஜே. அனஸை தொடர்­பு­கொண்டு வின­விய போது, வேட்­பாளர் பட்­டி­ய­லி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட விட­யங்கள் மற்றும் குருணாகலில் நடைபெற்ற சந்திப்பின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் உறுதிபடுத்தினார்.

(மெட்ரோ )
முஸ்லிம் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட சிரேஷ்ட உறுப்பினர் அனஸ் கட்சியில் இருந்து விலகினார். முஸ்லிம் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட சிரேஷ்ட உறுப்பினர் அனஸ் கட்சியில் இருந்து விலகினார். Reviewed by Madawala News on 12/21/2017 11:22:00 PM Rating: 5