Yahya

அர­சாங்­கத்தை தகர்க்கும் முதற்­கட்­ட­மாக உள்­ளூ­ராட்­சியை கைப்­பற்­றுவோம்.


அர­சாங்­கத்தின் தலை­மை­ய­கத்தை கைப்­பற்ற முன்னர் சுற்­றி­யுள்ள சிறிய முகாம்­களை தகர்த்­தெ­றிய வேண்டும். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் எமது வெற்­றியே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு எமது ஆட்­சியை அமைக்க சாத­க­மாக அமையும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார். ரணில், -மைத்­திரி-, மஹிந்த அணி­யினை நம்பி எந்­தப்­ப­யனும் இல்லை. பழைய ஆடை­களை கிழித்­தெ­றிந்­து­விட்டு புதிய ஆடைக்கு மாறுங்கள் எனவும்  அவர் குறிப்­பிட்டார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் மக்கள் சந்­திப்பு நாடு பூரா­கவும் இடம்­பெற்று வரும் நிலையில் நேற்று தன­வில பகு­தியில் இடம்­பெற்ற மக்கள் கூட்­டத்தில் அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

இந்த நாடு சுதந்­திரம் அடைந்த பின்னர் இலங்­கைக்­கென உரு­வாக்­கப்­பட்ட சகல அர­சியல் கொள்­கைகளும் இந்த நாட்டின் மக்­களை பாது­காக்கும் வகையில் அமை­ய­வில்லை. மாறான வளங்­களை சுரண்டும், சர்­வ­தேச நாடு­களை திருப்­திப்­ப­டுத்தும் வகை­யிலேயே அமைந்து வரு­கின்­றன. ஆட்­சியை கைப்­பற்­றிய பிர­தான இரண்டு கட்­சி­களும் நாட்டின் நீண்­ட­கால பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுத்­தரும் வகையில் எந்தத் திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. இன­வா­தமும், பிரி­வி­னை­வா­தமும் உருப்­பெற்று நாட்டில் நீண்­ட­கால போராட்­டங்­க­ளுக்கு சகல மக்­களும் முகங்­கொ­டுக்கும் நிலை­மையே உரு­வாக்­கப்­பட்­டது. அவ்­வாறு இருக்­கையில் தொடர்ந்தும் அதே ஆட்­சி­யினை கொண்­டு­வ­ரு­வதில் எந்தப் பயனும் இல்லை.

நாட்டை ஆட்சி செய்யும் பிர­தான அர­சாங்­கத்­திடம் ஊழல் இருப்­ப­தா­கவும் அவற்றை திருத்­து­வது கடினம் எனவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே கூறு­கின்றார். மறு­புறம் உடன்­ப­டிக்­கைகள், கொமிஷன் வேலை­களை நிறுத்­து­மாறு பிர­த­மரும், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் கூறு­கின்­றனர். ஆகவே இந்த நாட்டில் ஆட்­சியில் இருந்த பெரும் தலை­வர்கள் என கூறும் இவர்கள் மூவ­ருமே தமது ஆட்­சியில் இது­வரை ஊழல் இடம்­பெற்­றுள்­ளது என்­பதை ஒப்­புக்­கொண்­டுள்­ளனர். தற்­போது உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் நடக்கும் ஊழல் மோச­டிகள் குறித்து மக்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். அவ்­வாறு இருக்­கையில் மீண்டும் இவர்கள் மூவரில் யாரை நிய­மித்­தாலும் மீண்டும் அதே ஊழல் வாத அர­சாங்­கமே அடி­மட்­டத்தில் இருந்து உரு­வாக்­கப்­படும். ஆகவே மூவ­ரையும் தூக்கி எறிந்து புதிய அதி­கா­ரங்­களை மக்கள் கொண்­டு­வர வேண்டும். அவ்­வா­றான தூய்­மை­யான பலத்­தினை உரு­வாக்க நாம் தயா­ராக உள்ளோம்.

இந்த கூட்­டணி அர­சாங்கம் மிகவும் மோச­மான அர­சாங்கம் என்­பதை நிரூ­பித்து விட்­டது. முன்னர் ஆட்­சியில் இருந்­த­வர்கள் செய்த ஊழல் மோச­டி­களை தடுப்­ப­தாக கூறிக்­கொண்டு ஆட்­சிக்கு வந்­த­வர்கள் இன்று பழைய குற்­றங்­களை தண்­டிக்­காது தாமும் கள்ளர் கூட்­டத்தில் இணைந்­து­கொண்டு பழைய குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றும் நட­வ­டிக்­கை­யினை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். ஆகவே இவர்­களை விரட்­டி­ய­டிக்க வேண்­டிய தேவை இப்­போது ஏற்­பட்­டுள்­ள­து­. அ­ர­சாங்­கத்தின் தலை­மை­ய­கத்தை கைப்­பற்ற முன்னர் சுற்­றி­யுள்ள சிறிய முகாம்­களை தகர்த்­தெ­றிய வேண்டும். ஆகவே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் நாம் பெறும் வெற்­றியின் மூல­மாக அதற்­கான அடித்­த­ளத்தை நாம் பெற­வேண்டும்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் எமது வெற்றியே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு எமது ஆட்சியை அமைக்க சாதகமாக அமை யும். ரணில், -மைத்திரி,- மஹிந்த அணியினை நம்பி எந்தப்பயனும் இல்லை. இவர்கள் மூலம் நாட்டினை சரியாக கொண்டுசெல்ல முடியாது என்பதை நிரூபித்து விட்டனர். ஆகவே பழைய ஆடைகளை கிழித்தெறிந்து விட்டு புதிய ஆடைக்கு மாறுமாறும் அவர் குறிப்பிட்டார்.
அர­சாங்­கத்தை தகர்க்கும் முதற்­கட்­ட­மாக உள்­ளூ­ராட்­சியை கைப்­பற்­றுவோம். அர­சாங்­கத்தை தகர்க்கும் முதற்­கட்­ட­மாக  உள்­ளூ­ராட்­சியை கைப்­பற்­றுவோம். Reviewed by Madawala News on 12/30/2017 11:47:00 AM Rating: 5