Yahya

மடவளை - சிரிமல்வத்தை வீதியில் இடம்பெற்ற விபத்து. 17 வயது இளைஞர் பரிதாபகரமாக உயிரிழப்பு.


- ஜே.எம்.ஹபீஸ்-

மோட்டார் சைக்கிள் ஒன்று, முச்சக்கர வண்டி ஒன்றை முந்துகையில் அது விபத்துக்குள்ளாகி பக்கத்திலிருந்து மதிற் சுவரில் மோதி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 17 வயது இளைஞர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.

வத்துகாமம் பொலீஸ் பிரிவிலுள்ள மடவளை சிரிமல்வத்தை வீதியில் யஹங்கள் சந்தியில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது- மடவளை பக்கமிருந்து அமுனுகம பக்கமாகச் சென்ற முச்சகரவண்டி மேற்படி சந்தியில் திரும்புகையில் பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அதனை  முந்துகையில் முச்சக்கரவண்டியுடன் மோதி தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள மதிற்சுவரில் விழுந்துள்ளது.

இதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்றவரது தலை பலமாக அடிபட்டு மரணமடைந்துள்ளதாகப் பொலீசார் தெரிவித்தனர். சம்பவத்தில் மரணமடைந்தவர் அமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன நபராகும் . அதே நேரம் அவருக்கு முறையான அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்றும் பொலீசார் தெரிவித்தனர்.


காயமடைந்தவரை வத்தேகம வைத்திய சாலையில் அனுமதிக்கக் கொண்டு செல்லும் போது, அவர் மரணமடைந்துள்ளார்.

முச்சக்கர வண்டிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். தெல்தெனிய நீதிவான் முன் ஆஜர் செய்ய அஉள்ளதாகப் பொலீசார் தெரிவித்தனர்.

வத்துகாமம் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி நவரத்ன பண்டார தலைமையிலான குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

Pic : Place of accident - google street view
மடவளை - சிரிமல்வத்தை வீதியில் இடம்பெற்ற விபத்து. 17 வயது இளைஞர் பரிதாபகரமாக உயிரிழப்பு. மடவளை - சிரிமல்வத்தை வீதியில் இடம்பெற்ற விபத்து. 17 வயது இளைஞர் பரிதாபகரமாக உயிரிழப்பு. Reviewed by Madawala News on 12/31/2017 12:51:00 PM Rating: 5