Yahya

பொது­ஜன பெர­முன கட்­சியில் இருக்கும் பலர் ஜனாதிபதியுடன் இணைவர். காலப்­போக்கில் அந்த கட்சி முக­வரி அற்­றுப்­போகும் .


மஹிந்த ராஜ­பக்ஷ­வுக்கு முடி­யு­மானால் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பினர் பத­வியை இராஜி­னா­மா­செய்­து­விட்டு பொது­ஜன பெர­மு­னவின்  தலை­மைப்­ப­த­வியை பொறுப்­பேற்­றுக்­காட்­டட்டும்  என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் கொழும்பு மாந­க­ர­சபை க்கான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மேயர் வேட்­பா­ள­ரு­மான அஸாத் சாலி சவால்­வி­டுத்தார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

சிறி­லங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் தலை­வ­ராக இருக்கும் ஜீ.எல். பீரி­ஸுக்கு கட்­சியை சரி­யான முறையில் கட்­சியை வழி நடத்த முடி­யாது என்ற உண்­மையை அந்த கட்­சியில் இருப்­ப­வர்­களே உணர்ந்­துள்­ளனர். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் அதி­க­மான வேட்பு மனுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டதன் மூலம் பலரும் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை மஹிந்த ராஜபக்ஷ் வகிக்­க­வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து வரு­கின்­றனர்.

ஆனாலும் மஹிந்த ராஜபக்ஷ் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பினர் பத­வியை வகித்­துக்­கொண்டும். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை வகித்­துக்­கொண்டும். வேறு கட்சி ஒன்­றுக்கு தலைமை வகிக்க முடி­யாது.

அதனால் மஹிந்த ராஜபக்ஷ் முடி­யு­மானால் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பினர் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்டு சிறி­லங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் தலை­மைப்­பொ­றுப்பை ஏற்­றுக்­கொள்­ளட்டும்.

அத்­துடன் பொது­ஜன பெர­முன கட்­சியில் இருக்கும் பலர் எதிர்­வரும் காலத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இணைந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இறு­தியில் அந்த கட்­சியில் திரு­டர்­களும் மோச­டி­கா­ரர்­களும் மாத்­தி­ரமே இருப்­பார்கள். அவர்­களை வேறு­கட்­சிகள் இணைத்­துக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. அதனால் காலப்­போக்கில் அந்த கட்சி முக­வரி அற்­றுப்­போகும் நிலையே இருக்­கின்­றது.

மேலும் அர­சாங்கம் ஆட்­சிக்கு வரும்­போது மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களில் ஊழல் மோசடி காரர்­க­ளுக்கு எதி­ராக இன்னும் எந்த நட­வ­டிக்­கையும் எடுத்­த­தாக தெரி­ய­வில்லை. ஐக்­கிய தேசிய கட்சி அமைச்­சர்­களின் கீழ் இருக்கும் அமைச்­சுக்­களே இந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளாமல் இருக்­கின்­றன. அதனால் ஐக்­கிய தேசிய கட்சி ஆத­ர­வா­ளர்கள் இன்று விரக்­தி­ய­டைந்­தி­ருக்­கின்­றனர். அதனால் மக்கள் இந்த தேர்தலில் மோசடிகாரர்களுக்கு வாக்களிப்பதா, மோசடிகாரர்களை பாதுகாப்பவர்களுக்கு வாக்களிப்பதா அல்லது மோசடிகாரர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு வாக்களிப்பதா என்பதை தீர்மானிக்கவேண்டும் என்றார்.
பொது­ஜன பெர­முன கட்­சியில் இருக்கும் பலர் ஜனாதிபதியுடன் இணைவர். காலப்­போக்கில் அந்த கட்சி முக­வரி அற்­றுப்­போகும் . பொது­ஜன பெர­முன கட்­சியில் இருக்கும் பலர் ஜனாதிபதியுடன் இணைவர். காலப்­போக்கில் அந்த கட்சி முக­வரி அற்­றுப்­போகும் . Reviewed by Madawala News on 12/27/2017 01:16:00 PM Rating: 5