Yahya

BCAS கல்முனை வளாத்தில் Web Designing & Development தொடர்பான இலவச பயிற்சிப் பட்டறை.


BCAS கல்முனை வளாகத்தின் தகவல் தொழிநுட்ப திணைக்களம் (Department of IT) மற்றும் சந்தைப்படுத்தல் திணைக்களம் (Marketing Department) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலவச இணையத்தள வடிவமைப்பு மற்றும் விருத்தி தொடர்பான பயிற்சிப் பட்டறை (Workshop on Web Designing and Development) கடந்த புதன்கிழமை (13.12.2017) BCAS கல்முனை வளாகத்தின் கணினி ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

 குறித்த பயிற்சிப்பட்டறையிலே, இணையத்தளங்களின் அவசியம், இணையத்தளம் ஊடான வியாபாரம், எவ்வாறு இணையத்தளம் ஒன்றை பதிவு செய்வது (Domain Registration and Web Hosting), வடிவமைப்பது மற்றும் இணையம் ஊடாக எவ்வாறு தொழிலொன்றை மேற்கொள்ள முடியும்  போன்ற பல விடயங்கள் செய்முறைப் பயிற்சியினூடாக விளக்கப்பட்டது.

 மேலும், குறித்த பயிற்சிப்பட்டறையிலே, A/L பரீட்சை எழுதிய மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டதுடன்,  பங்குபற்றிய தகவல் தொழிநுட்ப பீட பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பின்னூட்டம் தெரிவிக்கையில் "மிகக்குறுகிய காலத்தில், நிறைய விடயங்களை தன்னால் அறியமுடியுமாக இருந்ததாகவும், இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

 குறித்த நிகழ்வானது பிராந்திய சந்தைப்படுத்தல் முகாமையாளர் Mr. A.L.M. Sabeel தலைமையில் இடம் பெற்ற அதேவேளை, வளவாளர்களாக, சர்வதேச மற்றும் உள்நாட்டு அனுபவம் வாய்ந்த, BCAS கல்முனை வளாகத்தின் தகவல் தொழிநுட்ப திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான Mr. A.R. Mohamed Nizzad மற்றும் Mr. K. Mohamed Ishraque ஆகியோர் கலந்துகொண்டனர்.

 BCAS நிறுவனமானது, தனது கற்கை நெறிகளுக்கு அப்பால், இவ்வாறான இலவச பயிற்சிப்பட்டறைகளை தனது சமூகக் கடமையாக தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 இப்பயிற்சிப்பட்டறை மீண்டும் நடைபெறவுள்ளதால், ஆர்வமுள்ள மாணவர்கள் BCAS கல்முனை வளாகத்தினை தொடர்புகொள்வதனூடாக அதில் கலந்துகொண்டு பயன்பெற முடியும்.
BCAS கல்முனை வளாத்தில் Web Designing & Development தொடர்பான இலவச பயிற்சிப் பட்டறை. BCAS கல்முனை வளாத்தில் Web Designing & Development தொடர்பான  இலவச பயிற்சிப் பட்டறை. Reviewed by Madawala News on 12/17/2017 09:59:00 PM Rating: 5