Kidny

Kidny

கட்டுகஸ்தோட்டை பிங்கா ஒயாவில் இருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்பு.


 (மொஹொமட்  ஆஸிக்)
( பிறந்த உடன் என்று சந்தேகிக்கப்படும் சிசு ஒன்றின்  சடலம் ஒன்றை
கட்டுகஸ்தோட்டை பிங்கா ஒயாவில் இருந்து கட்டுகஸ்தோட்டைபொலீஸார்   கணடெடுத்துள்ளனர்.

பொலீஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் படி விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸார் அங்கு சென்று  சிசுவின் சடலத்தை கண்டெடுத்த்துடன் அதன் சில பாகங்களை மீண்கள் கடித்திருத்தாகவும் தெரியவந்தனர்..

அச் சிசு பிறந்த உடன் ஆற்றில் எரிந்திருக்கலாம் என்று பொலீஸார்  நம்புகின்றனர். இது தொடர்பான  மரண விசாரணை இன்று 07 ம் திகதி கண்டி பிரதான நீதவான் முன்லையில்  இடம் பெற உள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.
கட்டுகஸ்தோட்டை பிங்கா ஒயாவில் இருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்பு. கட்டுகஸ்தோட்டை பிங்கா ஒயாவில் இருந்து சிசு ஒன்றின்  சடலம் மீட்பு. Reviewed by Madawala News on 12/08/2017 07:07:00 AM Rating: 5