Kidny

Kidny

பெரும்பான்மையான இடங்களில் மு கா யானை சின்னத்தில் போட்டி !























ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் பெரும்பான்மை இடங்களில் யானை சின்னத்தில் போட்டியிட சகல
நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் அக்கட்சியின் பிரதி தவிசாளருமான மஸியுத்தீன் நயீமுல்லாஹ் குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிஸ் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் நாம் அவரிடம் வினவிய போது கருத்து வெளியிட்ட அவர் 

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் பெரும்பான்மையான  இடங்களில் யானை சின்னத்தில் போட்டியிட சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அது தவிர கிழக்கிற்கு வெளியே தற்போது வேற்புமனு கோரப்பட்டுள்ள பல உள்ளுராட்சி மன்றங்களில் நாம் யானை சின்னதில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக கூறிய அவர் சில உள்ளூராட்சி மன்றங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதில் பிரதான கூட்டணி கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாடு ஏற்படாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்டார்.

அவ்வாறான இடங்களில் முன்னேற்பாடாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர் இணக்கப்பாடு எட்டப்படாத உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய தேசிய கட்சியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அங்கு மு கா தனித்து போட்டியிட சகல நடவடிக்கைகளையும் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கின் சில மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து யானை சின்னத்தின் போட்டியிட வாய்ப்புள்ளதாக மேலும் குறிப்பிட்டார்

பெரும்பான்மையான இடங்களில் மு கா யானை சின்னத்தில் போட்டி !  பெரும்பான்மையான இடங்களில் மு கா யானை சின்னத்தில் போட்டி ! Reviewed by Madawala News on 12/07/2017 10:04:00 PM Rating: 5