Kidny

Kidny

மியன்மர் சென்ற பாப்பரசரின் கோழைத்தனம்..


மிய‌ன்மாருக்கு சென்ற‌ பாப்ப‌ர‌ச‌ர் அந்நாட்டின் இராணுவ‌ அர‌சுக்கு ப‌ய‌ந்து மிய‌ன்மார் முஸ்லிம்க‌ளின் பெய‌ர் கொண்டு அவ‌ர்க‌ளை அழைக்காமை மிக‌ப்பெரிய‌ கோழைத்த‌ன‌மாகும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

அவ‌ர் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து,

அண்மையில் மிய‌ன்மாருக்கு சென்ற‌ பாப்ப‌ர‌ச‌ர் அங்கு இன‌வெறித்தாக்குத‌லுக்குள்ளான‌ மிய‌ன்மார் முஸ்லிம்க‌ளை பெய‌ர் கூறி அழைக்காம‌ல் மேலோட்ட‌மாக‌ குறிப்பிட்ட‌மை மிக‌ மோச‌மான‌ கோழைத்த‌ன‌மாகும்.

இத‌ன் மூல‌ம் பாப்ப‌ர‌ச‌ரும் இன‌வாதிக‌ளின் கூடார‌த்தில் இருக்கிறாரா என்ற‌ கேள்வி எழுவ‌துட‌ன் வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்ட‌ ஏழை ம‌க்க‌ளின் பெய‌ரைக்கூட‌ சொல்ல‌ முடியாத‌வ‌ர்க‌ள் நிச்ச‌ய‌ம் இறை தேவ‌னின் பிர‌திநிதிக‌ளாக‌ இருக்க‌ த‌குதிய‌ற்ற‌வ‌ர்க‌ளாவ‌ர்.

கிறுஸ்த‌வ‌ ம‌க்க‌ளின் த‌லைவ‌ரான‌ பாப்ப‌ர‌ச‌ர் இன‌ வ‌ன்முறையால் க‌டுமையாக‌ பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ மியன்மாரில் முஸ்லிம்க‌ள் ச‌க‌ல‌ உரிமைக‌ளும் பெற்று மீள் குடியேற்ற‌ப்ப‌டாத‌ வ‌ரை அங்கு போக‌ப் போவ‌தில்லை என‌ அறிவித்திருக்க‌ வேண்டும்.

அவ்வாறு செய்யாம‌ல் மிய‌ன்மாருக்கு சென்று அந்த‌ அர‌சால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் பெய‌ர் சொல்லாம‌ல் மிய‌ன்மார் அர‌சுக்கு ந‌ல்ல‌ பிள்ளையாக‌ காட்டி விட்டு ப‌ங்க‌ளாதேஷுக்கு வ‌ந்த‌பின் மிய‌ன்மார் முஸ்லிம்க‌ளுட‌ன் சேர்ந்து தானும் அழுத‌தாக‌ கூறுவ‌து மிக‌ப்பெரிய‌ ந‌டிப்பாக‌வே நாம் கூறுகிறோம்.

மிய‌ன்மார் முஸ்லிம்க‌ள் விட‌ய‌த்தில் பாப்ப‌ர‌ச‌ர் நீதியை க‌டைப்பிடிக்காது இன‌வாதிக‌ளுக்கு அடிமையாகிப்போன‌மை கிறிஸ்த‌வ‌ ம‌த‌த்துக்கே அவ‌மான‌மாகும்.

முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சி
மியன்மர் சென்ற பாப்பரசரின் கோழைத்தனம்..  மியன்மர் சென்ற பாப்பரசரின் கோழைத்தனம்.. Reviewed by Madawala News on 12/04/2017 12:55:00 PM Rating: 5