Yahya

ஹம்பாந்தோட்டை துறைமுகம் உலகில் வெற்றிகரமான துறைமுகமாக தரமுயரும்


பங்குடமையின் கீழ் ஹம்பாந்தோட்டை துறைமுகம் உலகில் வெற்றிகரமான துறைமுகமாக தரமுயரும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 
 
பாராளுமன்றத்தில் இன்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார். 
 
 
அமைச்சர் மங்கள சமரவீர தொடர்ந்து உரையாற்றுகையில் நீல பசுமை கொள்கையின் கீழ் இம்முறை வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 
 
பல்வேறு தரப்பினரின் ஆலோசனையை பெற்று இம்முறை வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டது. வறுமை ஒழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராம சக்தி வேலைத்திட்டத்திற்கு அடுத்த வருடத்தில் 200 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உற்பத்தி கிராமமாக கிராம உத்தியோகத்தர் பிரிவு அடையாளம் காணப்பட்டு வர்த்தக இலக்கை நோக்கிய உற்பத்திகள் ஊக்குவிக்கப்படும். கடந்த காலத்தில் பல்வேறான இயற்கை அனர்த்தங்களுக்கு நாடு முகங்கொடுத்ததை சுட்டிக்காட்டினார். வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு;ள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் உலகில் வெற்றிகரமான துறைமுகமாக தரமுயரும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் உலகில் வெற்றிகரமான துறைமுகமாக தரமுயரும் Reviewed by Madawala News on 12/11/2017 01:26:00 AM Rating: 5