Kidny

Kidny

நல்லாட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் ஒரு கொடியின் கீழ் வாழ்வதற்கும் அவர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் முயற்சித்து வருகின்றது..


அஷ்ரப் .சமத்
சில  அரசியல் வாதிகள யுத்தம் முடிவடைந்த பின்னரும் அரசியல் நோக்கத்திற்காக
மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக  சில மதவாத அமைப்புக்களை பயண்படுத்தி மீண்டும்  இனங்களுக்கிடையே குரோதத்தை வளர்த்து அதன் மூலம் ஆடசிக்கு வருவதற்கு முணைகின்றனர் என  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாய்கக குமாரதுங்க குறிப்பிட்டார்.

நேற்று(03)  பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில்சம் சம் பௌன்டேசனினால்வறிய  15 ஆயிரம்  பாடசாலை மாணவ மாணவிகளுக்கு  பாடசாலை உபகரணங்கள் அப்பியாச புத்தகங்களை வாங்குவதற்காக 45 இலட்சம் ருபா நிதியை கல்வியமைச்சரிடம் கையளிக்கும் வைபவம் நடைபெற்றது.

இவ் வைபவத்தின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாய்கக தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

இந்த நாட்டில் சகலரும் ஒரு நாடு  சகலருக்கும் அவர்களுக்குரிய உரிமைகளை கொடுப்பதற்கும்  பௌத்த மக்கள்  விருப்பம் தெரிவிக்கின்றனர்.ஆனால் ஒரு சிலரே இதனை எதிர்க்கின்றனர்.இந்த நல்லாட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் ஒரு கொடியின் கீழ்  வாழ்வதற்கும் அவர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் முயற்சித்து வருகின்றது. இந்த நல்லாட்சி அரசாங்கம்  பொது மக்களுக்கு உறுதியளித்த வாக்குறுதிகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றதா என்பதை நான் சொல்லத் தேவையில்லை.அது மக்களுக்கே நன்கு புரியும்

இந்த  நாட்டில் உள்ள பாடசாலைகளில் உள்ள தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களிடம் அல்லது முஸ்லீம் மாணவர்களிடம் கண்டு அவர்கள் வாழ்க்கையிலேயே  பேசியது இல்லை.அதற்காக பாடசாலை மட்டத்தில் இருந்து  மூவனங்களையும் சார்ந்த மாணவ மாணவிகளை அவரது கலை
காலாச்ரம், மதம் மொழி ரீதியான புரிந்துணர்வினை சகோதரத்தினை ஏற்படுத்துவதற்கு எனது தலைமையில் உள்ள தேசிய ஒற்றுமைப்பாட்டிற்கான அமைப்பு பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.  


சம் சம்  zam zam  பௌன்டேசன் நிறுவனத்தினால்  வருடா வருடம்  இந்த நாட்டில் வாழும் முவினங்களையும் சந்த கல்வி முன்னேற்றத்திற்காக உதவி வருகின்றது.இவ் அமைப்பின் தலைவராக  அஷ்ஷேக்  முப்தி யுசுப் ஹணிபா அவர்கள் 2013ஆம் ஆண்டில் இருந்து கல்வி, வீடமைப்பு சுயதொழில்  இயற்கை அணர்த்தங்கள் மற்றும் வறுமைக்கோட்டினில் வாழும் மூவினங்களை மேம்படுத்தும் ஒரு நிறுவனமாகும்கடந்த 3 வருடங்களாக 31 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு உதவியுள்ளது.இவ் ஆண்டின்  இம் அமைப்பினை சேவைகளை  தேசிய ஒற்றுமைப்பாட்டிற்கும் நல்லிணத்திற்குமான அலுவலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் வேண்டுகோளின் படி   இவ் அமைப்பின்  முஸ்லீம் தனவந்தர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட  நிதியத்தினை கல்வியமைச்சின் ஊடாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ் மக்களுக்கு உதவுமாறு  கேட்டுக் கொண்டிருந்தார்.


அதன் படி  சுமார்  14 மாவட்டங்களில் கல்விகற்கும் மூவினங்களையும் சார்ந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு இவ் அமைப்பு 15 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் காலணி பாடசாலைப் பைகள் வாங்குவதற்கு 45 இலட்சம் ருபாவை கல்வியமைச்சரிடம் இவ்  அமைப்பின் தலைவர் றிஸ்வி முப்தி ஹணிபா கையளித்தார்ஒவ்வொரு பக்கேஜ்  3ஆயிரம் ருபா பெறுமதி வாய்ந்ததாகும்

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள்  ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க கலந்து  சிறப்பித்தார்

அத்துடன் அமைச்சர்களாக .எச்.எம் பௌசி முஸலிம் சமய தபால் துறை அமைச்சர்  எச். ஹலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந் நிகழ்வின்போது -இவ் அமைப்பு அனுராத புரத்தில் உள்ள ஒரு சிங்கள பாடசாலைக்கு ஒரு கட்டித்தை நிர்மாணித்து தருவதாகவும் வாக்குறுதியளித்தது.

நல்லாட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் ஒரு கொடியின் கீழ் வாழ்வதற்கும் அவர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் முயற்சித்து வருகின்றது..  நல்லாட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் ஒரு கொடியின் கீழ்  வாழ்வதற்கும் அவர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் முயற்சித்து வருகின்றது.. Reviewed by Madawala News on 12/03/2017 01:08:00 PM Rating: 5