Yahya

சுயேற்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய அணி அமைச்சர் ரிஷாதுடன் இணைந்துகொண்டனர்..


கண்டி மாவட்டம் பாததும்பர பிரதேச சபையில் சுயேற்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய சுயேற்சை குழு அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளது.


மடவளை பஸார் சமூக சேவகரும் தொழிலதிபருமான அல் ஹாஜ் ஹனீப் அவர்களின் தலைமையிலான குறித்த சுயேற்சை குழு  கடந்த வாரம் கண்டி மாவட்டம் பாததும்பர பிரதேச சபையில் சுயேற்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் அக்குழு நேற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்த்தலில் போட்டியிட மயில் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.


நேற்று கண்டியில் அமைச்சர் ரிசாதை சந்தித்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்திய போது அந்த நிகழ்வில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கண்டி மாவட்ட அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அம்ஜாட் அவர்களும், அமைச்சரின் மாவட்ட இணைப்புச் செயலாளர் ரியாஸ் இஸாதீன் , மற்றுன் கட்சியின் மாவட்ட உயர்பீட உறுப்பினர் ரிஸ்மி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.


குறித்த சுயேற்சை குழுவின் தலைவர் மடவளை பஸார் சமூக சேவகரும் தொழிலதிபருமான அல் ஹாஜ் ஹனீப் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் முன்னாள் பாத்தும்பர அமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


குறித்த சுயேற்சை குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் வேட்பாளர் முன்னாள் போராளி மர்சூக் அவர்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



சுயேற்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய அணி அமைச்சர் ரிஷாதுடன் இணைந்துகொண்டனர்.. சுயேற்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய அணி அமைச்சர் ரிஷாதுடன் இணைந்துகொண்டனர்.. Reviewed by Madawala News on 12/19/2017 09:44:00 AM Rating: 5