Yahya

கிந்­தோட்­டையை மறந்­து­விட்­டோமா?


காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் இழப்­பு­களை மதிப்­பீடு செய்து நஷ்­­யீட்டை வழங்­கு­­தற்­கான நட­­டிக்­கைகள் தாம­­மா­கின்­றமை கவ­லைக்­கு­ரி­­தாகும்.


பாதிப்­புகள் சம்­பந்­­மாக இது­வரை பொலிஸ் முறைப்­பா­டுகள் மாத்­தி­ரமே பொது மக்­­ளி­­மி­ருந்து பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளன. மாறாக நஷ்­­யீட்டை வழங்கும் வகை­யி­லான மதிப்­பீட்டு பணிகள் ஆரம்­பிக்­கப்­­­வில்லை. சம்­பவம் நடந்து மூன்று வாரங்கள் தாண்­டி­விட்ட போதிலும் இது­வரை கிராம சேவகர் தமது வீடு­களின் பாதிப்­பு­களை பார்­வை­யி­டவோ சேதங்­களை மதிப்­பி­டவோ வருகை தர­வில்லை என மக்கள் குற்­றம்­சாட்­டு­கின்­றனர்.


தொழில்­நுட்ப உத்­தி­யோ­கத்­தர்கள் வேறு அலு­வல்­களில் ஈடு­பட்­டுள்­ளதால் அவர்­களைக் கொண்டு மதிப்­பீ­டு­களை மேற்­கொள்ள முடி­யா­துள்­­தா­கவும் அவர்­­ளது பிர­சன்­­மின்றி தம்மால் மதிப்­பீடு செய்ய முடி­யாது என்றும் கிராம சேவ­கர்கள் காரணம் கூறு­கின்­றனர். இந் நிலையில் தொழில்­நுட்ப உத்­தி­யோ­கத்­தர்­களை அழைத்­து­வந்து நஷ்­­யீடு வழங்­கு­­தற்­கான பணி­களை துர­திப்­­டுத்த வேண்­டி­யது முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் கடப்­பா­டாகும்.


சம்­பவம் நடை­பெற்­­வுடன் நாங்­கள்தான் முதலில் சென்றோம் என ஆளுக்காள் மார்­தட்­டு­வதை விட பாதிக்­கப்­பட்ட மக்­­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க நட­­டிக்கை எடுக்க வேண்­டி­யதே அர­சியல் தலை­மை­களின் கடப்­பா­டாகும்.


தற்­போது உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்பில் அர­சியல் கட்­சிகள் மும்­மு­­மாக இருப்­பதால் கிந்­தோட்­டையை மறந்­து­விட்­டார்கள் என்­பதே நிதர்­­­மாகும். எனினும் தேர்­தல்­களை காரணம் காட்டி இந்த வன்­மு­றை­களால் மிகக் கடு­மை­யான பாதிப்­பு­களை எதிர்­கொண்­டுள்ள அப்­பாவி மக்­­ளுக்கு நஷ்­­யீட்டைப் பெற்றுக் கொடுக்கும் கடப்­பாட்­டி­லி­ருந்து எவரும் தப்­பி­விட முடி­யாது.


என­வேதான் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இது­வி­­யத்தில் உட­­டி­யாக தலை­யிட்டு தொழில்­நுட்ப அலு­வர்­­ளையும் கிராம சேவ­கர்­­ளையும் பயன்­­டுத்தி இழப்­பீ­டு­களை மதிப்­பீடு செய்­யவும் அதற்­கான நஷ்­­யீ­டு­களைப் பெற்றுக் கொடுக்­கவும் முன்­வர வேண்டும்.


பொது­வாக அரச இயந்­திரம் இவ்­வா­றான விட­யங்­களில் மெத்­தனப் போக்கை கடைப்­பி­டிப்­பது வழக்­­மாகும். எனினும் கிந்­தோட்டை விட­யத்தில் பிர­தமர் நேரில் சென்று உத்­­­விட்டும் நஷ்­­யீடு வழங்கும் நட­­டிக்­கைகள் தாம­­மா­கு­­தாயின் இதன் பின்­­ணியில் ஏதேனும் அர­சியல் அழுத்­தங்கள் உள்­­னவா எனும் சந்­தே­கமும் எழு­வதைத் தவிர்க்க முடி­­வில்லை.


கடந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் அளுத்­கம வன்­மு­றைகள் இடம்­பெற்ற பின்னர் இரா­ணுவ வீரர்­களின் உத­வி­யுடன் பாதிப்­புகள் சீர்­செய்­யப்­பட்­டன. பள்­ளி­வா­சல்கள், வீடுகள் என்­பன முழு­மை­யாக பூர­ணப்­­டுத்திக் கொடுக்­கப்­பட்­டன


எனினும் அளுத்­கம சம்­­வத்தைப் பிர­சா­ரப்­­டுத்தி முஸ்­லிம்­களின் ஏகோ­பித்த ஆத­­வுடன் ஆட்­சிக்கு வந்த இந்த அர­சாங்­கத்தின் காலத்தில் கிந்­தோட்டை சம்­பவம் நடந்­தமை ஏற்றுக் கொள்ள முடி­யா­­தாகும். அதிலும் நஷ்டயீடு வழங்குவதில் கூட தாமதங்கள் ஏற்படுத்தப்படுவது மிகவும் கவலை தருவதாகும்.


எனவேதான் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அழுத்தங்களை வழங்கி பாதிக்கப்பட்ட கிந்தோட்டை மக்களுக்கு நஷ்டயீட்டைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.


-Vidivelli-

கிந்­தோட்­டையை மறந்­து­விட்­டோமா?  கிந்­தோட்­டையை மறந்­து­விட்­டோமா? Reviewed by Madawala News on 12/08/2017 04:06:00 PM Rating: 5