Yahya

ரஸ்யாவும் இலங்கை மீதான தனது பிடியை இறுக்கிவிட்டதா?

.நா சபையில் அமெரிகாவை எதிர்த்து வாக்களித்ததற்கும்,அஸ்பெஸ்ட் தகடுக்கான தடை
நீக்கமும் இதற்கான காரணங்களாக இருக்குமா? என்றும் பார்க்கவேண்டியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் வந்த வேகத்தில் அமெரிக்காவை குசிப்படுத்தும் நோக்கத்தோடும், நன்றிக்கடனுக்காகவும் ரஸ்யா சீனா போன்ற நாடுகளுக்கு எதிரான சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

அதன் காரணமாக சீனாவின் இலங்கை மீதான சில அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடைவிதித்திருந்தார்கள்.இதற்கு எதிராக சீனா கொடுத்த பதிலடிக்கு ஈடு கொடுக்கமுடியாமல் கடைசி நேரத்தில் சீனாவின் காலடியில் விழவேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. இதன் காரணமாகவே சீனாவுக்கு இலங்கையை திறந்து விட்டுள்ளார்கள்.

அதேபோன்று ரஸ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அஸ்பெஸ்ட் கூரைத்தகடுகள் மக்களுக்கு சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்துகின்றது என்று கூறிய ஜனாதிபதி மைதிரி அவர்கள் அதற்கான தடையையும் ஏற்படுத்தியிருந்தார்.இதன் காரணமாகவோ என்னவோ ரஸ்யாவும் தனது பங்குக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கைத் தேயிலையில் ஒரு வகை வண்டினம் காணப்படுவதாகச் சொல்லி தேயிலை இறக்குதிக்கு தடை விதித்துள்ளது.

உண்மையிலேயே வண்டுதான் இதற்கு காரணமாக இருக்குமாக இருந்தால் அதற்குத்தான் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், மாறாக அவசர அவசரமாக அஸ்பெஸ்ட் கூரைத்தகடு இறக்குமதிக்கு இருந்த தடையை நீக்குகின்றார்கள். அப்படியென்றால் பிரச்சினை ரஸ்யாவின் இலங்கை மீதான கோபம்தான் அதற்கு காராணமாக இருக்குமோ என்றும் என்னத்தோன்றுகிறது.

இலங்கை அரசாங்கம் அமெரிக்கா சார்பாக கடுமையாக சார்ந்து செல்லும் விடயம் மேற்படி நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது என்பது தெளிவாகின்றது.இதன் காரணமாகவே .நா சபையிலும் பலஸ்தீன் சம்பந்தமாக அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்த்து வாக்களித்து தங்களது நடுநிலைமையை காட்டியுள்ளார்களோ என்றும் என்னத்தோன்றுகிறது

காரணம் இதற்கு சில காலங்களுக்கு முன் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக யுனஸ்கோவினால் அமெரிக்காவின் உதவியோடு கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரித்து வாக்களிக்காமல் இஸ்ரேலுக்கு ஆதரவாக நடுநிலை வகித்ததையும் நாம் அறிவோம்.

அன்று இப்படி நடந்து கொண்டவர்கள் இன்று பலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பது ஆச்சரியமான விடயமாகவே பார்க்கபட வேண்டியுள்ளது.

ஆகவே இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளக்கூடிய விடயம் என்னவென்றால் ஒருகாலத்தில் இலங்கையோடு விசுவாசமாக இருந்த நாடுகளான ரஸ்யா சீனா இந்தியா போன்ற நாடுகள் இலங்கை மீதான விடயத்தில் இறுக்கமான போக்கையே கடைப்படிக்க துவங்கிவிட்டது என்பதையே சுட்டிக்காட்டி நிற்கின்றது எனலாம்.

இந்த விடயங்கள் எல்லாம் நல்லாட்சி என்ற  பெயரில் இயங்கும் இந்த ஆட்சியாளர்களுக்கு மிக துரதிருஷ்டமான நிலையையே எதிர்காலத்தில் ஏற்படுத்த போகின்றது என்பதே உண்மையாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
ரஸ்யாவும் இலங்கை மீதான தனது பிடியை இறுக்கிவிட்டதா?  ரஸ்யாவும் இலங்கை மீதான தனது பிடியை இறுக்கிவிட்டதா?  Reviewed by Madawala News on 12/24/2017 11:24:00 AM Rating: 5