Yahya

ரிஷாத் பதுர்தீன் நரகத்திற்கே செல்வார் !




டை கோட் அணிந்த மிஸ்டர் பதுர்தீன் நீங்கள் அமைச்சராக இருந்தது போது வீட்டுக்கு போங்கள்  என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்


அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் ..


பதுர்தீன் தனது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் அவரின் காதை பிடித்து வெளியே வீசவேண்டும்.


வில்பத்து தொடர்பில் நாம் 2014 இல் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டோம். அப்போது எம்மை இனவாதிகளாக சிலர் சித்தரித்து உண்மையான பிரச்சினையை முழுங்கடித்தார்கள்.


காவி உடையை அணிந்த நாம் உண்மைகளை வெளிப்படுத்தியதால் காவிகளை காவி உடையை வைத்து தாக்க முயற்சித்தார்.அவர் நிச்சயமாக நரகம் செல்வார். 


மத்திய வங்கி, ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் இற்கு ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவது போல அமைச்சர்கள் வழங்கும் அரசியல் லஞ்சம் குறித்தும் விசாரணை செய்ய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.


பத்ருத்தீனுக்கும் அவரது குடும்பத்துக்கும் 300 ஏக்கர் காணி கிடைத்தது எவ்வாறு? இன்றும் அதற்கான எந்தவித பதிலும் கிடையாது. இவருக்கு மத்திய கிழக்கிலுள்ள பல்வேறு முகவர்களுடன் தொடர்பு இருக்கின்றது.


நாம் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். வாருங்கள், அம்பாறையிலிருந்து ஆரம்பிப்போம். மன்னார், மட்டக்களப்பு, வடக்கிலுள்ள முல்லைத்தீவுக்கும் செல்வோம். நான் பொறுப்புடன் சொல்கின்றேன். மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் ஒவ்வொருவரும் 50 ஏக்கர் கணக்கில் காணிகளைப் பிடித்து வைத்துள்ளனர் எனவும் தேரர் மேலும் கூறினார்.



ரிஷாத் பதுர்தீன் நரகத்திற்கே செல்வார் ! ரிஷாத் பதுர்தீன் நரகத்திற்கே செல்வார் ! Reviewed by Madawala News on 12/27/2017 12:45:00 AM Rating: 5