Yahya

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் சட்டங்கள் இன்று முதல் அமுல்


உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் சட்டங்கள் இன்று முதல் அமுலாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


பொதுமக்களின் வாக்குரிமையை பாதுகாக்க பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதுதொடர்பாக மேலும் தொவிக்கையில்  தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

 

கூட்டங்கள் இடம்பெறும் வளாகத்தில் மாத்திரம் ஒலிபெருக்கியை பயன்படுத்த முடியும். சாதாரண தர பரீட்சைக்கு தடை ஏற்படுத்தும் பிரச்சார பணிகளை மேற்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என்றும் பொலிஸ்ஊடகப் பேச்சாளர் கூறினார்.

 

தேர்தல் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்

கூட்டங்கள் இடம்பெறும் வளாகத்தில் மாத்திரம் ஒலிபெருக்கியை பயன்படுத்த முடியும. இதற்கான கால எல்லை திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் காலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையும் வெள்ளி மற்றம் சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் அதகாலை 1 மணி வரை மாத்திரமே பயன்படுத்த முடியும்


ஞாயிற்றுக்கிழமை காரை 6 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரை மாத்திரமே பயன்படுத்த முடியும்இரண்டு கட்டங்களின் கீழ் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. முதலாம் கட்ட வேட்புமனுக்கள் இன்று முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

 

21 மாவட்டங்களில் 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை பொறுப்டீபற்கும் பணி இன்று ஆரம்பமானது இரண்டாம் கட்டமாக 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 18 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன


எதிர்வரும் 21ம் திகதி நள்ளிரவு வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். பொலிஸ் தேர்தல் அலுவலகம் பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது


இதற்கு மேலதிகமாக தொகுதிகளில் 42 அலுவலகங்களும் அமைந்துள்ளன. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்றோ அந்தக் காலப்பகுதியிலோ பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் சட்டங்கள் இன்று முதல் அமுல்  உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் சட்டங்கள் இன்று முதல் அமுல் Reviewed by Madawala News on 12/12/2017 12:00:00 AM Rating: 5