Kidny

Kidny

மு.கா. வில் யஹியாக்கான் விலகலா?

றியாஸ் இஸ்மாயில்
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் சென்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்
அம்பாறை மாவட்டப் பொருளாளரும்இஉயர்பீட உறுப்பினருமான தொழிலதிபர் .சீ.யஹியாக்கான் இன்று(02.12.2017) அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த சந்திப்புக்கான ஏற்பாட்டினை அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

.சீ.யஹியாக்கான் அவர்கள் ஜனாதிபதியை சந்தித்ததன் நோக்கம் தான் என்ன? இவர்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிய வருகின்றது.இதற்கு பின்னணி  சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயமாக இருக்கலாமா? மிக விரைவில் தெரியவரும்.

இச்சந்திப்பின் போது கண்டி மாவட்ட  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் போராளியும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆலோசகருமான றிஸ்மி ஹாஜியார் உடன் இருந்தமை விசேடமாகக் கூறிக்கொள்ளலாம்.

இதேவேளை அந்த நேரம் ஜனாதிபதியைச் சந்திக்க வந்த அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்கள் .சீ.யஹியாக்கான் அவர்களுடன் நெருக்கமான கருத்து பரிமாற்றங்களைச் செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதை அறிந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் நேரில் சந்தித்தும் முட்டுக்கட்டைகளை போடுவதாக தெரியவருகின்றது.

இவ்வாரான நடவடிக்கைகளுக்கு றிஸ்மி ஹாஜியார் தான் காரணமாக உள்ளதாக உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருந்தும் மிக விரைவில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் ஏற்பாட்டில்அ அக்கரைப்பற்று பாலமுனை ஒலுவில நிந்தவூர சாய்நதமருது கல்முனை நாவிதன்வெள இறக்காமம் போன்ற பிரதேசங்களில் இருந்து அரசியல் பிரமுகர்கள் பலர் மிக விரைவில் ஜனாதிபதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாக தெரியவருகின்றது.
மு.கா. வில் யஹியாக்கான் விலகலா?  மு.கா. வில் யஹியாக்கான் விலகலா? Reviewed by Madawala News on 12/02/2017 07:32:00 PM Rating: 5