Yahya

பேருவளையில் நடந்தது என்ன?


மஸாஹிம் மொஹமட் தேர்தலில் போட்டியிட வேண்டுமாக இருந்தால் சில கோரிக்கைகளை முன்வைத்து
இருந்தார்.

1. வேட்பாளர்களின் குழுத் தலைவராக தன்னை நியமிக்க வேண்டும். 

2. தான் வசித்திருக்கும் மரதானை தொகுதியை விட்டு அதிகமான ஐ.தே.க ஆதவாளர்கள் உள்ள மாளிகாஹேன எனும் தொகுதியில் போட்டியிட வேண்டும்.

3. தனது உற்ற நண்பர்களான 7 பேரை வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும்.

4. அடுத்த நகர சபையின் தலைவராக தன்னை நியமிப்பதாக எழுத்து மூலம் தர வேண்டும்.

முதலாவது கோரிக்கையை பொருத்தவரை புதிய அரசியல் திருத்த சட்டமூலத்தின் அடிப்படையில் குழுத் தலைவர் என்று ஒன்று கிடையாது என்று நான் கூறியதற்கிணங்க இன்னும் ஒருவருடன் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கேட்டதன் பிற்பாடு அதனை ஏற்றுக் கொண்டார்.

இரண்டாவது கோரிக்கையின் பிரகாரம் மாளிகாஹேனை தொகுதியில் போட்டியிட இருந்த சுமார் 10 வருடங்கள் அத்தப் பிரதேசத்தில் உறுப்பினராக இருந்த எனக்கும் கட்சிக்கும் அயராது உழைத்த முன்னால் நகர சபை உறுப்பினர் ஹம்ஸா உவைஸை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கி உறுப்பினர்கள் நியமனப் பட்டியலில் இட்டு மஸாஹிம் மொஹமட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சம்மதமளித்தேன்.

மூன்றாவது கோரிக்கைக்கு 7 பேரில் 6 பேரை வேட்பாளராக நியமிப்பதற்கு சம்மதமளித்து ஒருவர் மாத்திரம் ஐக்கிய மக்கள்  சுதந்திர முன்னனியில் சென்ற முறை தேர்தலில் போட்டியிட்ட முஷ்பிர் ஷாபியை   இம்முறை பேட்டியிட வாய்ப்பளிப்பதாக  கூறிய வாக்கிக்காக  மஸாஹிம் மொஹமட்டுடன் வாதாடு அதனை மாத்திரம் பெற்றுக் கொண்டேன். எனவே மஸாஹிம் மொஹமட்டின் இந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டேன்.

நான்காவது கோரிக்கையின் பிரகாரம் முன்னால் பேருவளை நகர சபை உறுப்பினர்கள் மூவர் மஸாஹிம் மொஹமட்டின் சென்ற காலங்களில் செய்த ஊழல் மோசடிகளை கருத்திற் கொண்டு அடுத்த தலைவராக மஸாஹிம் மொஹமட் நியமிக்கப்படக் கூடாது என மறுப்பு தெரிவித்தனர் எது எப்படி இருப்பினும் முன்னால் பேருவளை நகர சபையின் தலைவர் என்ற வகையிலும், கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற வகையிலும் அடுத்த நகர சபை தலைவராக அவரை நியமிப்பதாக மஸாஹிம் மொஹமட்டின் இரு கைகளை பிடித்து வாக்குறுதியளித்தேன். இது சீனங்கோட்டை ஹனபி ஹாஜியாரின் மகனாரின் வீட்டில் 09/12/2017 அன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஊரின் சில பிரமுகர்களான   ஷிராஸ் ஹனபி ,மிஸ்வர் காஸிம், முனவ்வர் ஹாஜி,  ஆகியோரை  சாட்சியமாக வைத்து இடம்பெற்றது.


கொளரவ சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்களதும் லக்ஷ்மன் விஜேமான்ன பாலித தெவருப் பெரும ஆகிய மூவருக்கும் கடந்த பொதுத் தேர்தலில் மஸாஹிம் மொஹமட்  தமது வெற்றிட்காக அயராது உழைத்தவர் என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமாகிய ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் அழைத்துச் சென்று அடுத்த நகர சபை தலைவராக மஸாஹிம் மொஹமட்டை நியமிப்பதாக உறுதி மொழியளித்தார்கள்.

கட்சியின் தலைவர் தன்னை அடுத்த நகர சபையின் தலைவராக நியமிப்பதாக கூறியும் தான் சுயேட்சை குழுவாக தேர்தலில் களமிறங்குவதாக கூறுவதற்கான காரணத்தை ஆராய தொடங்கினோம். இதன் போது சில உண்மைகள் கசிந்தன...

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னாலே இன்று வரை களுத்துறை மாவட்டத்தின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாது போனதற்கு அதாவது சென்ற பாராளுமன்ற தேர்தலில் என்னை தேல்விக்குட்படுத்துவதற்கு தான் காரணமென்று நினைத்து இம்முறை தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்காது , நான் பழிவாங்குவேன் என தப்புக்கணக்கிட்டு  மஸாஹிம் மொஹமட்டும் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு பல துன்பங்கள் விளைவித்த போதும் மஹிந்த அணியினருடன் தனது சுயலாபத்திற்காக சமூகத்தை காட்டிக் கொடுத்த மர்ஜான் பளீல் மற்றும் பஸில் ராஜபக்ஷவுமாக மூவருமா இணைந்து ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் முடிவாக தான் மஹிந்த அணியின் போட்டியிட்டால் பேருவளை முஸ்லிம் மக்கள்  வாக்களிக்க மாட்டார்கள் என்பதனை அறிந்த மஸாஹிம் மொஹமட் சுயேட்சையாக ஓர் குழுவினரை தேர்தலில் களமிறக்குவதாக இரண்டு மாதங்களுக்ககு முன்னரே பஸில் ராஜபக்ஷவுடன் இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளார் .

இதன்போது பஸில் ராஜபக்ஷ பேருவளை மக்களால் தான் தாம் தேல்வியடைந்ததாகவும் இம்முறை தேர்தலில் எவ்வளவு செலவாகினாலும் பேருவளையில் வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார் என்பது நம்பத்தகுந்த செய்தி வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைத்தது.
மஸாஹிம் மொஹமட்டுடன் களமிறங்கியுள்ள சுயேட்சை குழுவினர் மஹிந்த அணியினரே என்பதனை இன்னும் உறுதிப் படுத்துவதாக கூட்டு எதிரணியினரின் செயலாளர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையின் மூலம் தெளிவாகிறது
"தாம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 93 தெகுதிகளில் போட்டியிடுவதாகவும் அவற்றில் பேருவளை தொகுதியில் மாத்திரம் சுயேட்சையாக களமிறங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூட்டு எதிரணியினரின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை தொகுதி அமைப்பாளருமாகிய பியல் நிசாந்த ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்

 " பேருவளை தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மஹிந்த அணியினருடன் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள்" 

இது மேலும் மஸாஹிம் அணியினர் மஹிந்த அணியினரே என்பதனை உறுதிப்டுத்துகின்றனவாக அமைகின்றது.

தனக்கு கிடைத்த லட்சக் கணக்கான பணத்திற்கும் சொகுசு வாகணத்திற்கும் பேருவளை மக்களை பழிக்கிடாவாக்குவதாக மஸாஹிம் மொஹமட் பகல் கனவு காண்கின்றார். ஆனால் பேருவளை மக்கள் மடையர்களல்ல,  ஏமாற்று வித்தைகளை கண்டு மயங்குபவர்களல்ல அனைத்து உண்மைகளையும் அறிந்தவர்கள்.

மர்ஜான் பளீல் ஏற்கனவே பல தடவைகள் சமூகத்திற்கு எதிராக மஹிந்த அணியினர் செயற்பட்ட பொழுதும்  எந்தவொரு பதவியில்லாமலும் சமூகத்தின் பக்கம் நிட்காமல் தனது பொருளாதார நலவுக்காக அராஜக ஆட்சியாளர்களாக இருந்த மஹிந்த அணியினருடன் சேர்ந்து  சமூகத்தை காட்டிக் கொடுத்தவர் அதே போல் தான் மஸாஹிம் மொஹமட்டின் வரலாறு 1997 ஆண்டு நகர சபை தேர்தலில் மர்ஹூம் தேஷமான்ய பாக்கிர் மாக்கார் தென்மாகாண ஆளுநனராக பதவி வகித்த போதும் அல்-ஹாஜ் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்திலும் இதே மஸாஹிம் மொஹமட் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவாக மேடை ஏறி ஐக்கிய தேசிய கட்சியினை தேல்விக் குட்படுத்துவதற்கு மும்முரமாக செயற்பட்டு முஸ்லிம் மக்களை பொய் புறத்தால் ஏமாற்றியவர் எனவே இருவரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.


இப்திகார் ஜெமீல் 
மேல் மாகாண சபை உறுப்பினர்
பேருவளை தொகுதி ஐ.தே.கட்சியின் பிரதான அமைப்பாளர்.
பேருவளையில் நடந்தது என்ன? பேருவளையில் நடந்தது என்ன? Reviewed by Madawala News on 12/16/2017 02:15:00 PM Rating: 5