Yahya

புகையிரத போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக அறிவிக்க நடவடிக்கை


புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி
அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். 

ஜனாதிபதி செயலாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி 12 புகையிரத தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் அஞ்சல் சேவை ஸ்தம்பிதம் அடைந்ததுடன், பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். 

சம்பள பிரச்சினைக்கு இதுவரையில் தீர்மானம் வழங்கப்படாததன் காரணமாக பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதாக லோகொமோடிவ் செயற்பாட்டு பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார். 

எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக புகையிரத சேவை பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் அதனை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி இன்று கையெழுத்திட்டுள்ளார்.
புகையிரத போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக அறிவிக்க நடவடிக்கை புகையிரத போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக அறிவிக்க நடவடிக்கை Reviewed by Madawala News on 12/08/2017 11:36:00 PM Rating: 5