Yahya

நாடுவது நலம்' இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நூல் வெளியீடு


ஏற்றத்தாழ்வுகளை மறந்து நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்லும் முயற்சியில் சகல இனக்
குழுமங்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஊடக அமைச்சரும் தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
'நாடுவது நலம்' என்ற தொனிப் பொருளில் மீள்பார்வை பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியிட்டு விழாவில் திரு. பாக்கிர் மாக்கார் உரையாற்றினார்.

வெளியீட்டு விழா கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையில் நேற்று இடம்பெற்றது.

விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹையிர் இந்த நூல் சகவாழ்வு குறித்த சிறந்ததொரு செய்தியை எடுத்துரைக்கிறது என்று குறிப்பிட்டார்.
நாடுவது நலம்' இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நூல் வெளியீடு நாடுவது நலம்' இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நூல் வெளியீடு Reviewed by Madawala News on 12/23/2017 12:08:00 AM Rating: 5