Yahya

பலஸ்தீன் தலைநகர் தொடர்பில் சவுதி அரேபியா எந்தவொரு முன்மொழிவையும் செய்யவில்லை .. சவுதி அரேபியாவில் பயின்ற மூத்த கலாநிதி மறுப்பு ..




இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியனுக்கும் இடையே சமாதான முன்முயற்சியாக, சவுதி அரேபியாவின் இராச்சியம் கிழக்கு ஜெருசலேத்திற்கு பதிலாக பாலஸ்தீனத்தின் எதிர்கால தலைநகரமாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் அருகிலுள்ள பாலஸ்தீனிய நகரமான அபு டிஸ் கிராமத்தை முன்மொழிந்துள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்திவெளியிட்டிருந்த நிகையில் குறித்த ஊடக செய்தியை மேற்கோள் காட்டி மேலும் பல செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இதன் தமிழாக்கம் எமது மடவளை நியுசிலும் வெளியாகியிருந்தது .

இந்த நிலையில் இந்த நிவ்யோர் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் எதுவித உண்மைத்தன்மையும் இல்லை என சவுதி அரேபியாவில் கல்வி பயின்ற அங்குள்ள கல்வியாளர்களுடன் தொடர்பில் இருக்கும்  மூத்த கலாநிதி ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு சுட்டிக்காட்டினார்.

அதே நேரம் பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் அரபு சமிட் நாடுகளை எகிப்து நாட்டில் கூட்டி அதிரடி முடிவுகளை சவுதி அரேபியா எடுத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பலஸ்தீன் தலைநகர் தொடர்பில் சவுதி அரேபியா எந்தவொரு முன்மொழிவையும் செய்யவில்லை .. சவுதி அரேபியாவில் பயின்ற மூத்த கலாநிதி மறுப்பு ..  பலஸ்தீன் தலைநகர் தொடர்பில் சவுதி அரேபியா எந்தவொரு முன்மொழிவையும் செய்யவில்லை .. சவுதி அரேபியாவில் பயின்ற மூத்த கலாநிதி மறுப்பு .. Reviewed by Madawala News on 12/10/2017 11:07:00 PM Rating: 5