Kidny

Kidny

டன் பிரியசாத் UNP யில் போட்டியிடுகிறார் என பரவும் செய்திக்கு கொலன்னாவை தொகுதி அமைப்பாளர் மறுப்பு ..


இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட சர்ச்சைக்குறிய டன் பிரியசாத் உள்ளூராட்சி சபை தேர்தலில்
கொலன்னாவை பிரதேச சபைக்காக போட்டியிடுவதாக வெளியாகியுள்ள தகவல்களில் எதுவித  உண்மையும் இல்லை  என கொலன்னாவை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் வினவிய போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

ரன்ஞ்சன் ராமனாயக்கவுடன் டன் பிரியாத் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று கொலன்னாவை பிரதேச சபைக்காக டன் பிரியசாத் என்ற இனவாதி போட்டியிடுவதாக வெளியாகியுள்ள தகவலில் எதுவித உண்மையும் இல்லை எனக் கூறிய அவர்,

டன் பிரியசாத் போன்றவர்களுக்கு தனது கொலன்னாவை தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட தான் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர் குறித்த நபர் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட வாய்ப்பு கேட்கவில்லை என குறிப்பிட்டார்.
டன் பிரியசாத் UNP யில் போட்டியிடுகிறார் என பரவும் செய்திக்கு கொலன்னாவை தொகுதி அமைப்பாளர் மறுப்பு ..  டன் பிரியசாத் UNP யில் போட்டியிடுகிறார் என பரவும் செய்திக்கு கொலன்னாவை தொகுதி அமைப்பாளர் மறுப்பு .. Reviewed by Madawala News on 12/01/2017 08:02:00 PM Rating: 5