Yahya

திகன, அம்பகஹலந்த அல் மனார் பாலர் பாடசாலையின் பாலர்களின் உணவுச்சந்தை மற்றும் பரிசளிப்பு விழா.

திகன, அம்பகஹலந்த அல் மனார் பாலர் பாடசாலையின் பாலர்களின் உணவுச்சந்தை மற்றும் பரிசளிப்பு விழா 20.12.2017 ம் திகதி அல் மனார் பாலர் பாடசாலை கட்டிடத்தில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக ஹிஜ்ராபுர மஸ்ஜிதுல் நூர் ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் மற்றும் தும்பர சம்மேளனத்தின் தலைவரும், தொழிலதிபருமான கௌரவ அல் ஹாஜ் இஸ்ஹாக் அவர்களும், அல் ஹாஜ் புவாத் அவர்களின் புதல்வன் சகோதரன் கியாஸ் மற்றும் கௌரவ அதிதிகளாக அல் ஹிக்மா பாடசாலை அதிபர் திரு. ரசாட் (நளிமி) மற்றும் ஹிஜ்ராபுர பாடசாலை அதிபர் திரு. இல்யாஸ் இவர்களுடன் முன்னால் அல் ஹிக்மா அதிபரும், K.H.A.. அஹதிய்யா அதிபர் திரு. அக்ராம் ஆசிரியரும் கலந்து சிறப்பித்தனர். மேலும் அம்பகஹலந்த முஹியிதீன் ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் அல் ஹாஜ் பாரூக் மற்றும் ஜனாஸா நலன்புரிச்சங்க உருப்பனிர்களும் சமுகமளித்திருந்தனர்.


    மேலும் அன்றைய தினம் பாலர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் அதிதிகளின் விஷேட உரைகளும் நிகழ்த்தப்பட்டது. அத்துடன் மாணவர்களுக்கு முன்பள்ளி கற்கை நெறிக்கான சான்றிதழ்களுடன் பரிசில்களும் வழங்கப்பட்டது.

வளர்ந்துவரும் இளம் அறிவிப்பாளர் சகோதரன் அனஸ் ஹாபிஸ் அவர்களை அம்பகஹலந்த அல் மனார் பாடசாலை நிர்வாகத்தினால் சிறந்த அறிவிப்பாளருக்கான விஷேட சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிகமான ஊர் மக்கள் சமுகமளித்திருந்தனர்.

-Rusdeen-
திகன, அம்பகஹலந்த அல் மனார் பாலர் பாடசாலையின் பாலர்களின் உணவுச்சந்தை மற்றும் பரிசளிப்பு விழா. திகன, அம்பகஹலந்த அல் மனார் பாலர் பாடசாலையின் பாலர்களின் உணவுச்சந்தை மற்றும் பரிசளிப்பு விழா. Reviewed by Madawala News on 12/21/2017 01:38:00 PM Rating: 5