Yahya

ரிஷாத் பதியுதீனின் முஸ்லிம் கொலனி அமைக்கும் திட்டத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது நாங்களே


ரிஷாத் பதியுதீனின் முஸ்லிம் கொலனி  அமைக்கும் திட்டத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது
நாங்களே என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டார்.

வில்பத்துவில்  வன அழிப்பு இடம்பெறுவதாக கூறி அதற்கு  எதிரான பேரணி ஒன்று கொழும்பில் இன்று இடம்பெற்றது. குறித்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் நா காரியாளயத்தில் அறிக்கை ஒன்றையும் கையளித்தார்.

அங்கு கருத்து வெளியிட்ட ஆனந்த சாகர தேரர்,

எமக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதாக கூறினார் எமக்கு அழைப்பானை அனுப்புவதாக கூறினார்கள். நாம் அவற்றுக்கு அச்சப்படவில்லை.நாம் ரிஷாத் பதியுதீனுக்கு பயமில்லை.ரிஷாத் பதியுதீன் இப்போதும் குழு வியாபரம் செய்கிறார்.நாம் இப்போதும் அதனை அச்சமின்றி  கூறுகிறோம்

தற்போது வில்பத்துவுக்கும் கைவைக்க போகிறார்கள் அதனை தடுத்து நிறுத்த கடைசி போராட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
ரிஷாத் பதியுதீனின் முஸ்லிம் கொலனி அமைக்கும் திட்டத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது நாங்களே  ரிஷாத் பதியுதீனின் முஸ்லிம் கொலனி  அமைக்கும் திட்டத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது நாங்களே Reviewed by Madawala News on 12/14/2017 08:35:00 PM Rating: 5