Yahya

பலஸ்தீனுக்கி அமெரிக்க கடும் எச்சரிக்கை ...


இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேத்தை அமெரிக்கா அங்கீகரித்ததன் பின்னர் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளை இரத்து செய்வதற்கு எதிராக பலஸ்தீனியர்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது.


அமெரிக்க துணை ஜனாதிபதி பென்ஸ் மற்றும் பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இடையே இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தையை இரத்து செய்வது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.


பென்ஸின் பலஸ்தீனிய வருகையை தாங்கள் விரும்பவில்லை என்று ஒரு மூத்த அதிகாரி முன்னதாக தெரிவித்தார்பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் ஃபடா கட்சி இது குறித்து .நா.விடம் முறையிடப்போவதாகக் கூறியுள்ளது


முன்னதாக, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


வெள்ளை மாளிகையில் உரையாற்றிய ட்ரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்


அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.


ட்ரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பலஸ்தீன தலைவர் மொஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ''இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்துள்ளார்.

பலஸ்தீனுக்கி அமெரிக்க கடும் எச்சரிக்கை ...  பலஸ்தீனுக்கி அமெரிக்க கடும் எச்சரிக்கை ... Reviewed by Madawala News on 12/09/2017 10:42:00 PM Rating: 5