Kidny

Kidny

முஸ்லிம் காங்கிரசினால் ஏமாற்றப்பட்ட கம்பஹா- அத்தனகல்ல முஸ்லிம்கள்.




இந்த நாட்டு முஸ்லிம் சமுகம் அதிலும்  கிழக்கிற்கு வெளியில் வசிக்கின்ற எம் சகோதரர்கள்  கடந்த தேர்தல்களில் எவ்வாறு முஸ்லிம் கட்சிகளுடன் செயற்பட்டார்கள் என்பதையும் எதிர்வரும் தேர்தல்களில் எந்தக் கட்சியுடன்  செயற்படவேண்டும் என்பதையும் சிந்திப்பதற்காக எழுதுகின்றேன்.


இதுவரை காலமும் கிழக்கிற்கு வெளியே   SLMC பெரிதாக எதனையும் சாதிக்காததையும் தொடர்ச்சியான வாக்குறுதி மீறல்களும் இந்த மக்களை சிந்திக்க தோண்டியுள்ளது.


மேலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள  புதிய தேர்தல் முறையின் கீழ் பெறும்பான்மை கட்சிகளான UNP , SLFP உடன் சேர்ந்தே  SLMC போட்டியிடவேண்டியுள்ளது.


அவ்வாறான நிலையில் திரும்பியும் SLMC உறுப்பினறுக்கு வாக்களித்து ஏமாறுவதா ? அல்லது பெறும்பன்மை கட்சி வேற்பாளறுக்கு வாக்களித்து தமது தேவைகளை நிறைவேடற்றிக்கொள்வதா? என்ற கேள்வி எம் முன்னால் உள்ளது.


முஸ்லீம் கட்சிகள் தேசிய அரசியலில் வலுவடைய  முன்னர் குறிப்பாக 1993 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிழக்கிற்கு வெளியே வசிக்கும் நாம்,எமது தேவைகளை பெறும்பான்மை கட்சி உறுப்பினர் மூலமே பெற்றுக்கொண்டோம் என்பது அனைவரும் அறிந்த விடயம்.


கம்பஹா மாவட்ட அத்தனகல்ல தொகுதியில் அமைந்துள்ள கஹடோவிட முஸ்லீம் கிரமம் கடந்த 25 வருடங்களாக குடி நீர் பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர்.


இங்குள்ள குடி நீர் சுகாதாரத்திற்க்கு உகந்ததல்ல என Wathupitiwela Base Hospital முன்னாள் DMO குறிப்பிட்டடிருந்தார்.


இந்த நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டங்களில் ஒன்றாக எமது ஓர் நீர்வழங்கள் திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டது. இதனை துரிதப்படுத்தும் நோக்கில் ஏற்கனவே  ஊரில் கானப்பட்ட பிற நீர்வழங்கள் திட்டங்கள் இதனுடன் இனைத்துக்கொள்ளப்பட்டன.


எனினும் 3 வருடங்கள் கடந்தும் திட்டம் பூர்த்தியாக்கப்படாது நொண்டிச்சாட்டுக்கள் வழமை போல் தொடர்கின்றன.அதிலும் நீர்வழங்கள் அமைச்சு SLMC வசம் இருந்தும் இம்மக்கள் ஏமாற்றப்பட்டு புறக்கணிக்கப்படுவது ஒருபக்கத்தில் வேதனையாகவும் இன்னொறு பக்கத்தில் நல்லதொரு படிப்பினையாகவும் உள்ளது.


மேலும் கடந்த மாகான சபை தேர்தலில் நீர் கொழும்பை சேர்ந்த சகோதரர் சாபி ரஹீம்  3வது தடவையும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அந்தத் தேர்தலில் நான்காயிரம் வாக்குகளுக்கு மேல் பெறும் வேற்பாளருக்கு இரண்டு வருட உறுப்பினர் வாய்ப்பு வழங்கப்படுமென தேர்தல் மேடைகளில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.



அவ்வாறு வாக்குகளைப் பெற்ற கஹடோவிடயை சேர்ந்த சகோதரர் முஸ்தாக் மதனிக்கு இன்று வரை அவ்வாய்ப்பு வழங்கப்படவில்லை.


தேர்தலுக்கு பின்னரான பொதுக்கூட்டம்  ஒன்றில் (கஹடோவிட) அவ்வாறு அதிக வாக்குகளைப் பெற்ற சகோதரர் முஸ்தாக் மதனிக்கு 2வருட உறுப்பினர் பதவியும்+கஹடோவிட்ட கிராமத்திற்கான நீர்வழங்கள் திட்டமும் SLMC தலைவரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டதுடன் இன்று வரை அவை நிறைவேற்றப்படவில்லை.


எனவே  இவ்வாறாக ஏமாற்றப்படும் அரசியல்வாதிகளுக்கும் முஸ்லீம் கட்சிகளுக்கும் தமது பெறுமதியான வாக்குகளை  வழங்கி மீண்டும் ஏமாறாது,பெறும்பான்மை கட்சி வேற்பாளர் ஒருவரை உறுப்பினர்க்கி தமது தேவைகளை பெறும்பான்மை கட்சி மூலம் முன்னர் போல பெற்றுக்கொள்ள அனைவறும் தயாராகுவோம்.


நன்றி

Wafa

முஸ்லிம் காங்கிரசினால் ஏமாற்றப்பட்ட கம்பஹா- அத்தனகல்ல முஸ்லிம்கள்.  முஸ்லிம் காங்கிரசினால் ஏமாற்றப்பட்ட கம்பஹா- அத்தனகல்ல முஸ்லிம்கள். Reviewed by Madawala News on 12/02/2017 03:19:00 PM Rating: 5