Yahya

திருகோணமலையில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி கட்டுப்பணம் செலுத்தியது ..



நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதத்கான
ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பணம் கட்சியின் மூதூர் தொகுதி மற்றும் குச்சவெளி பிரதேச சபைகளுக்கான வேட்புமனு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபால் நேற்று காலை செலுத்தப்பட்டது.

இதன்போது முன்னாள் கிழக்கு  மாகாண சபை உறுப்பினர் அருண சிறிசேன முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் சாந்த உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் மத்தியில் கூட்டணி கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகியன திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை தனித்து போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி கட்டுப்பணம் செலுத்தியது ..  திருகோணமலையில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி கட்டுப்பணம் செலுத்தியது .. Reviewed by Madawala News on 12/12/2017 12:35:00 PM Rating: 5