Yahya

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் உள்ளார்களா ? ஜனாதிபதிக்கு சந்தேகம்


யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் உள்ளார்களா ? என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அமைச்சர்
ஹலீமிடம் கேள்வி எழுப்பியதாக சமூகவலைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தேசிய மீலாத் விழாவை நடத்த யாழ்ப்பாணம் இவ்வருடம் (2017) தெரிவு செய்யப்பட்ட பின்னர், அமைச்சர் ஹலீம் மற்றும் அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்து,யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழாவை நடாத்த உள்ளோம்.இதில் நீங்கள் பிரதம அதிதியாக பங்குகொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளதாகவும்

இதன்போது குறுக்கிட்டுள்ள ஜனாதிபதி, யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் உள்ளார்களா..?? 

உங்களுக்கு மீலாத் விழாவை நடாத்த வேறு இடம் கிடைக்கவில்லையா..??  என கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பதிலளித்துள்ள அமைச்சர் ஹலீம், யாழ்ப்பாண முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக அங்கு வாழ்கின்றனர்.அவர்கள் 1990 இல் #புலிகளினால் #இனச்சுத்திகரிப்புச் செய்யபட்டவர்கள். தற்போது படிப்படியாக மீள்குடியேறி வருகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்கின்றனரா என்ற ஐயப்பாட்டுடன் ஜனாதிபதி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் றிஷாட் தேசிய மீலாத் விழா மேடையில், மறைமுக தாக்குதலை மேற்கொண்டு பதிலடி கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் உள்ளார்களா ? ஜனாதிபதிக்கு சந்தேகம்  யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் உள்ளார்களா ? ஜனாதிபதிக்கு சந்தேகம் Reviewed by Madawala News on 12/25/2017 08:30:00 PM Rating: 5