Yahya

தகவல்களை தர மறுக்கும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் ..


நிந்தவூர் தள வைத்தியசாலையின் சேவைகள் தொடர்பில் அண்மைக்காலமாக
பிரதேச மக்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமன்றி அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளும் அங்குள்ள வைத்தியர்கள், ஏனைய பணியாட்கள் தொடர்பிலும் அவ்வப்போது பல்வேறு அதிருப்தியினை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இத்தகைய சூழ்நிலையில் நிந்தவூரை சேர்ந்த நபர் ஒருவரினால் கடந்த 31.10.2017 எனத் திகதியிட்டு தகவல் உரிமை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய மூன்று விண்ணப்பங்கள் பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டிரும்தன. இவ்விண்ணப்பங்கள் மூன்றும் குறித்த வைத்தியசாலை இபிவிருத்திக்கு குழுவின் பதவி வழி அங்கத்தவர்கள், அவர்களின் தற்போது வரையான பதவிக்காலம், அபிவிருத்திக் குழுவின் யாப்பு, மேலும், குறித்த வைத்தியசாலையில் 2015.2016,2017ம் ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட  நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்கள் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பிரிவுகள், சத்திரசிகிச்சை பெற்றோர் எண்ணிக்கை, அதே ஆண்டுகளில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இறந்தவர்களின் எண்ணிக்கை, மகப்பேறுகளின் எண்ணிக்கை என்பனவற்றின் விபரங்களும், நிந்தவூர் தள வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற வைத்தியர்கள் விபரம், ஏனைய பணியாட்களின் விபரம், அவர்கள் சேவை மேற்கொள்ளும் பிரிவு, குறித்த வைத்தியசாலையில் அவர்களது சேவைக்காலம் என்பனவற்றோடு வைத்தியசாலையில் காணப்படுகின்ற அவசர ஊர்திகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் செலவு என்பன முதலியன குறித்த தகவல் உரிமை சட்ட விண்ணப்பத்தின் கீழ் கோரப்பட்டிருந்த்து.

இருப்பினும் குறித்த கோரிக்கைகளுக்கு கூறப்படுகின்ற காலத்தினுள்ள பதில் வழங்க நிந்தவூர் வைத்தியசாலையின் அத்தியட்சகராக கடமையாற்றுகின்ற திருமதி எஸ். ஆர். இஸ்ஸடீன் தவறியிருந்தார் என்பதோடு வேண்டுமென்று தகவல்களை வழங்காது இழுத்தடிப்பதற்காக தகவல் கோருவதற்காகவென காணப்படுகின்ற விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு பின்னர் கடிதம் ஒன்றை குறித்த விண்ணப்பதார்ருக்கு அனுப்பியுள்ளார். 

இதன்பின்னர் குறித்த காலவரையறையும், சட்ட ஏற்பாடுகளையும் வைத்திய அத்தியட்சகர் மீறியதனால் குறித்தளிக்கப்பட்ட அலுவலரான பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு இது பற்றிய மேன்முனையீடானது தகவல் கோருபவரால் 17.11.2017 அன்று அனுப்ப்பட்டது. மேன்முறையீட்டிற்கான பதிலானது குறித்தளிக்கப்பட்ட அலுவலரிடமிருத்து 25.11.2017 திகதியிட்டு கிடைக்கப் பெற்றிருந்த்து. அப்பதில் கடிதத்தில் விண்ணப்பதாரி கோரிய தகவல்களை குறித்த வைத்திய அத்தியட்சகர் வழங்க தயாராக இருப்பதாகவும், அஙழவரிடமிருந்து குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் தகவல் கோரிய நிந்தவூரை சேர்ந்த நபர் வேண்டப்பட்டிருந்தார். 

இந்நிலையில், 27.11.2017 என திகிதிடப்பட்ட மூன்று கடிதங்கள் நிந்தவூர் வைத்திய அத்தியட்சகரிடமிருந்து கிடைக்கப்பெற்றிருந்தது. இக்கடிதங்களில் மேலே குறிப்பிட்ட கோரப்பட்ட தகவல்களில் சிலவற்றை வழங்க முடியாது எனவும், ஏனையவற்றை வழங்க முடியும் எனவும் அவற்றுக்கு எல்லாமாக 56 ரூபாவை செலுத்துமாறும் வேண்டப்பட்டிருந்த்து. இதற்கிணங்க குறித்த தகவல் கோரியவர் 02.12.2017 அன்று காலை 10 மணியளவில்  வைத்தியசாலைக்கு சென்று வைத்திய அத்தியட்சகரை சந்திக்க அவருடைய அலவலகத்திற்கு சென்றபோது அங்கு அலுவலகத்தில் அவருடைய கணவரான கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளருடன் இருந்தமையினால் சந்திக்க மறுத்துள்ளார். இதன் பின்னர் இந்த தகவல் கோரும் விண்ணப்பதார்ர் மற்றைய அலுவலகத்திற்கு சென்று  பணத்தை  செலுத்த முற்பட்ட போது அங்கு தகவல் அலுவலர் இருக்கவில்லை என்பதோடு மற்றைய அலுவலரிடம் ருபாய் 56 பணத்தை செலுத்திவிட்டு 02.12.2017 திகதியிட்ட 243320 எனும் இலக்கம் கொண்ட பற்றுச் சீட்டை பெற்றுள்ளார். இதன்போது குறித்த தகவல்களை இன்று பெற முடியுமா என அங்கு பணம் பெற்றுக்கொண்ட நபரிடம் வினவிய வேளை, அவ் உத்தியோகத்தர் வைத்திய அத்தியட்சகரிடம் சென்று வந்துவிட்டு "இன்று பெறமுடியாது எனவும், பின்னர் அறிவிப்பதாகவும" கூறியிருக்கின்றார். இதன் பின்னர் அங்கிருந்து தகவல்கோரிய விண்ணப்பதாரி குறித்த தகவல் ஆவணங்களை தபாலில் அனுப்புமாறு கோரிவிட்டு திரும்பியுள்ளார்.

தகவல் உரிமைச்சட்டத்தின் பிரகாரம் தகவல் அலுவலர் கடமை நேரம் முழுவதும் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பது பொறுப்பாகும். தகவல் கோருகின்ற அல்லது தகவல் கோரிய நபரொருவரை அரச உயர் அதிகாரியோ அல்லது அதிகாரியோ சந்திக்காது நிராகரிப்பதும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடிய குற்றமாகும். 

இதேவேளை, நிந்தவூர் வைத்தியசாலையின் தகவல் அலுவலர் 14.12.2017 அன்று தகவல் கோரிய நித்தவூரை சேர்ந்த நபருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு நீங்கள் கோரிய தகவல்கள் தயாராக இருப்பதாகவும், அலுவலகத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு வேண்டியதற்கு இணங்க 16.12.2017 அன்று அந்நபர் காலை 11 மணியளவில் நிந்வைதவூர் வைத்தியசாலைக்கு சென்று தகவல் அலுவலரை சந்தித்த போது, தகவல் அலுவர் தகவல் கோரியிருந்த நபரிடம் அடையாள அட்டையின் பிரதியை வழங்குமாறு கோரியுள்ளார். அப்போது அந்நபர் அடையாள அட்டையின் பிரதி எதற்காக என வினவியபோது குறித்த தகவல் அலுவலர் "நீங்கள் இலங்கை பிரசையா இல்லையா என உறுதிப்படுத்திய பின்பே தகவலை வழங்க முடியும் எனவும், அடையாள அட்டையின் பிரதி வழங்காதபட்சத்தில் தகவல் வழங்க முடியாது என நிராகரித்துள்ளார். தகவல் கோரும் ஒருவருக்கு தகவல் வழங்க முன்னர் அவருடைய அடையாள அட்டையை பரிசோதிக்க வேண்டும் என்றோ, அதன் பிரதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றோ தகவல் உரிமை சட்டம் ஏற்பாடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வைத்திய அத்தியட்சகர் வேண்டுமென்று இத்தகைய இழிவின நடத்தையை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தகவல் கோரிய நபர் தகவல் உரிமை ஆணையகத்திற்கு இதுபற்றி மேன் முறையீடு செய்வதாகவும் கூறிவிட்டு வெளியேறியுள்ளார். குறித்த தகவல் கோரிய நபர் ஒரு அரச உத்தியோகத்தர் என்பதும், வைத்தியசாலை அத்தியட்சகர் மற்றும் ஏனைய உத்தியோகத்தரகளானாலும் நன்கு அறியப்பட்டவராகும். இருப்பினும் வைத்தியசாலையின் அத்தியட்சகர் குறித்த தகவல்களை வழங்குவதனால் தனது நிருவாக சீர்கேடுகள் வெளிப்பட வாய்யப்புள்ளது என அச்ச மேலீட்டினாலேயே இவ்வாறு முறையற்ற வித்த்தில் நடந்துகொள்வதாக நிந்தவூரின் புத்திசீவிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த வைத்திய அத்தியட்சர் நிந்தவூர் வைத்தியசாலையில் கடமையாற்றும் அதேவேளை அவரின் கணவரே கல்முனை பிராந்திய சுகாதார பணிபமனையின் பிரதி பணிப்பாளராகவும் உள்ளார். இதனால் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளையும், இவ்வாறான நிந்தவூர் பிரசைகளையும் முறையற்ற விதத்தில் நடாத்துகின்ற போதும் இவரின் கணவரால் பாதுகாக்கப்படக் கூடிய நிலமை காணப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த தகவல் கோரிய நபர் கருத்து தெரிவிக்கையில், கோரப்பட்ட தகவல்கள் அனைத்தும் மக்களின் நலன் தொடர்பானதாகும் என்பதுடன் இவ்வைத்திய அத்தியட்சகர் கடமைக்கு வந்த பின்னரே இவ் வைத்தியசாலையில் பல சீர்கேடுகள் குறித்து மக்கள் கூறிவருவதாகவும் தெரிவித்ததுடண், இவர் வைத்திய அத்தியட்சகராகவும், ஒரு பெண் அதிகாரியாகவும் இருந்துகொண்டு இத்தகை முறையில் வைத்தியசாலைக்கு வருகின்ற நபர்களுடன் நடந்துகொள்ளும் முறை குறித்த வைத்தியசாலைக்கே அவப்பெயரை உண்டாக்கும் எனவும் தெரிவித்தார்.

தான் இதுப்பற்றி தகவல் உரிமை சட்டத்துடன் தொடர்புபட்ட நிறுவனங்களான ஆர்டிஐ நவ், ஆர்டீஐ வோட்ச் போன்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும், இது பற்றிய மேன்முறையீடொன்று தகவல் உரிமை ஆணைக்குழுவிற்கு விரைவில் அனுப்ப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் தன்னிடமிருந்து ரூபாய் 56 பணத்தை நேர்மையீனமாக பெற்றுக்கொண்டு அதற்கான தகவல் ஆவணங்களை வழங்காது குறித்த பணத்தை அவரது தேவைக்கென வைத்திருப்பது குற்றமாகும் எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் பொலிசாருக்கு முறைப்பாடு மேறகொள்ளவும் ஆலோசித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இச்சம்பவமான தற்போது நிந்தவூர் மக்கள் மத்தியில் நிந்தவூர் வைத்தியசாலை தொடர்பில் மேலும் அதிருப்தியை உண்டுபண்ணியுள்ளது.
தகவல்களை தர மறுக்கும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் .. தகவல்களை தர மறுக்கும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் .. Reviewed by Madawala News on 12/31/2017 12:43:00 PM Rating: 5