Yahya

ஞானசாரரால் இலக்கு வைக்கப்படுவது ரிசாத் அல்ல முஸ்லிம் சமூகம்..

முஸ்லிம்கள் என்றாலே ஒருமடங்கு தண்ணியை ஊண்டிக் குடிக்கும் ஞானசாராவுக்கு,மற்ற
முஸ்லிம் தலைவர்களைவிட ரிசாட் பதியுதீனைக் கண்டால்தான் கண்ணுக்குள் உருத்துகின்றது.

ஞானசார உண்மையிலேயே நாட்டுப்பற்றுள்ளவர் என்றிருந்தால், நாட்டை நாசப்படுத்திய பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதில் எந்தத்தப்பும் இல்லை என்று கூறியிருக்க மாட்டார்.

அதே நேரம் இலங்கைக்கு எதிராக செயல்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடத்தும் டயஸ்போராக்களை சந்தித்து சிரித்த முகத்தோடு போட்டோ பிடித்திருக்க மாட்டார்.

எங்களுக்கு சுயாட்சி தாருங்கள் என்று போராடும் தமிழ் தலைவர்களின் செயல்பாட்டைக் கண்டும் காணாதவர்போல் நாடகமாடமாட்டார்.

இலங்கையில் நடந்தது போர்க் குற்றமல்ல இனப்படுகொலைதான் நடந்தது என்று விக்கி அவர்கள் வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றிய போது எந்தக் கண்டனமும் தெறிவிக்காமல் நடந்து கொண்டிருக்க மாட்டார்.

இப்படி நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களின் செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கும் ஞானசாரா அவர்கள்  ரிசாட் பதியுதீனை மட்டும் இலக்கு வைப்பதன் மர்மம் என்ன என்று பார்த்தால், மற்ற முஸ்லிம் தலைவர்களை விட இந்த ரிசாட்தான் முஸ்லிம்கள் என்றால் முன்னுக்கு நிற்கின்றார் ஆகவே இவரை மட்டம் தட்டிவிட்டால் போதும் என்ற நிலையில் செயல்படுகின்றார் இந்த ஞானசார என்பதே அவரின் செயல்பாட்டை கொண்டு தீர்மானிக்க முடிகின்றது.

அதனால் தான் தனது விருப்பத்துக்குறிய ஜனாதிபதி மைதிரி அவர்களிடம் ஞானசாரா அவர்கள்  ரிசாட் அமைச்சரின் பதவியை பறிக்கும்படி கேட்டுள்ளார்.ஞானசாராவின் கதையைக்கேட்டு மரிச்சிக்கட்டியை மறித்துக் கட்டிய ஜானாதிபதி அவர்கள் ஞானசாராவுக்காக இதனையும் செய்தாலும் செய்வார் என்பதில் சந்தேகம் இல்லாமலும் இல்லை

இப்படி நடந்தால் ஞானசாராவுக்கு விருப்பமான முஸ்லிம் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு இருக்கும் கைக்கூலிகளுக்கு மிகவும் சந்தோசமான செய்தியாகவும் அது அமையும். அதே நேரம் முஸ்லிம்களுக்கு ஒரு பேரிடியாகவும் அது  அமையலாம். இப்படியான நிலையைத்தான் ஞானசாராவும் அதன் கூட்டமும் எதிர்பார்க்கின்றார்கள்.

ஆகவே முஸ்லிம்களின் சரீயா சட்டம் தொடக்கம் பர்தா உடைவரை குற்றம் கண்டு துள்ளிக் குதிக்கும் ஞாசார  ரிசாட் அமைச்சரை மட்டும் இலக்கு வைக்கின்றார் என்றால் உண்மையிலேயே ரிசாட்தான் உண்மையான முஸ்லிம்களின் தலைவர் என்று பயந்துதான் ஞானசார அவர் மீது பாய்கின்றார் என்பது தெளிவாகின்றது.

ஞானசார எதைக்குற்றம் என்று சொல்கின்றாரோ, எவரைப்பார்த்து குற்றம் சொல்ல முனைகின்றாரோ, அவர்கள் எமது பார்வையில் நல்லவர்கள் என்று முத்திரை பதிக்கப்படுகின்றார்கள்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
ஞானசாரரால் இலக்கு வைக்கப்படுவது ரிசாத் அல்ல முஸ்லிம் சமூகம்.. ஞானசாரரால் இலக்கு வைக்கப்படுவது ரிசாத் அல்ல முஸ்லிம் சமூகம்.. Reviewed by Madawala News on 12/28/2017 01:41:00 PM Rating: 5