Yahya

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ரோ மூக்கை நுழைத்ததுள்ளதாக தகவல் ..


எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இந்திய உளவு பிரிவான ரோ அமைப்பு தலையீடு செய்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக வேண்டிரோஅமைப்பின் உறுப்பினராக செயற்படும் முன்னாள் வட கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இலங்கையின் பிராஜாவுரிமையையும் கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்திய பிரஜையான வரதராஜ பெருமாள் இதுவரை சுற்றுலா வீசாவிலேயே இலங்கையில் வசித்து வருகின்றார். தற்பொழுது, ரோ அமைப்பின் வேண்டுகோளின் பேரில் இவர் இந்த பிரஜாவுரிமைக்கான கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவரது வேண்டுகோளுக்கு இதுவரையில் அரசாங்கம் பதிலளிக்காதுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்திய ரோ அமைப்பும், அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தேவாலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முன்னணியில் செயப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ரோ மூக்கை நுழைத்ததுள்ளதாக தகவல் ..  உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ரோ மூக்கை நுழைத்ததுள்ளதாக தகவல் .. Reviewed by Madawala News on 12/11/2017 11:32:00 AM Rating: 5