Yahya

அன்று தலைவர் அஷ்ரப் புனித கஃபதுல்லாவில் கேட்ட துஆ இன்று இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

எம்.ஜே.எம்.சஜீத்)
மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தால் அங்கிகரிக்கப்பட்ட பின் புனித 'மக்கா நகர்' சென்று விஷேட துஆ கேட்டதாக மக்கள் மத்தியில் தெரிவித்தார்.

இறைவா! இந்த கட்சி இலங்கையில் வாழும் முஸ்லிம் சமுகத்தின் நலன்களில் அக்கரை செலுத்தும் வரை இந்த கட்சியை காப்பாற்றி பாதுகாப்பாயாக! எனவும் இந்த கட்சி முஸ்லிம் சமுகத்தின் நலன்களில் இருந்து என்று விலகி செயற்படுமோ அன்றிலிருந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை முற்றாக அழித்து விடு! என தான் புனித மக்கா நகர் சென்று கஃபதுல்லாவில் விஷேட துஆ பிரார்த்தனை மேற்கொண்டதாக மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் பகிரங்கமாகவே நம் மத்தியில் தெரிவித்தார்.

இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரபின் கொள்கையில் இருந்து விலகி முஸ்லிம் சமுகத்தின் எதிரிகளுடன் உறவுகளைப் பேணுவதாலும்இ முஸ்லிம் சமூகத்திற்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாலும்  தலைவர் அஸ்ரப்புடன் பல அர்ப்பணிப்போடு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்த்த  தலைவர் அஸ்ரபின் மூத்த போராளிகளில் பெரும்பாலானோர் முஸ்லிம் காங்கிரஸை விட்டு வெளியேரிவிட்டனர். எனவேஇ தலைவர் அஸ்ரபின் அன்றைய துஆ இறைவனால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக  என நம்ப வேண்டிய நிலைமை நமக்கு ஏற்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேசிய காங்கிரஸின் 'சாத்வீக சமருக்கு புறப்படுவோம்' என்ற மாபெரும் எழுச்சிக் கூட்டம் அக்கரைப்பற்று புதுப்பட்டி பள்ளி வாசல் தலைவர் அல்ஹாஜ் லாபிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்....

தேசிய காங்கிரஸ் கட்சியின் அதன் தலைமையும் தேசிய ரீதியில் நமது நாட்டின் சமாதானத்திற்கும் இன ஒற்றுமைக்கும் பாரிய பங்கினை வழங்கியுள்ளது. இன்று நமது நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு துணிச்சலாக தேசிய காங்கிரஸ் குரல் கொடுத்தது என்பது வரலாற்று நிகழ்வாகும். அரசியலுக்காக ஒரு போதும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாப்போல் தேசிய காங்கிரஸ் செயல்படுவதில்லை. தெளிவான வெளிப்படையான யதார்தமான கருத்துக்களை மக்கள் முன்வைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சியே தேசிய காங்கிரஸாகும்.  

2005ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இரண்டு விடயங்களை முன்வைத்து தேசிய காங்கிரஸ் ஆதரவு வழங்கியது. நமது நாட்டில் இடம்பெற்று வரும் கொடூர யுத்தம் இல்லாம் செய்ய வேண்டும்இ வடகிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிறிக்கப்பட்டு வடகிழக்கில் வாழும் சகல இன மக்களும் இன உறவுடன் வாழும் நிலமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த விடயங்களில் வெற்றியும் பெற்றோம். 

இதற்காக கடந்த ஜனாபதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நன்றிக்கடனாக வெளிப்படையாக ஆதரவு கொடுத்தோம். தேசிய காங்கிரஸ் தலைமையை எப்படியும் அரசியலில் வீழ்த்த வேண்டும் என்பதற்காக பல சக்திகள் ஒன்றினைந்து பல சதிகளைச் மேற்கொண்டனர். இதனால் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் அல்ல தேசிய மட்டத்திலும் நமது சமூகத்திற்காக சுதந்திரமான குரல் கொடுக்கும் குரலை நாம் இழக்க வேண்டி ஏற்பட்டது. தேசிய காங்கிரசை முன்னாள் ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்சயின் பெயரை வைத்து அழிக்கலாம் என சில இனவாத கட்சிகள் மக்கள் மத்தியில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டது.

தற்போது நமது நாட்டின் அரசியல் நிலையில் தேசிய காங்கிரஸின் தலைமை மாத்திரமே நமது சமூகத்திற்காக சுதந்திரமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அண்மையில் ஜனாதிபதி அதிகௌரவ மைத்திரிப்பால சிறிசேன அவர்களின் தலைமைiயில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நமது தேசிய காங்கிரஸின் தலைவர்; நமது நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளை யதார்த்தமாகவும்இ தைரியமாகவும் முன்வைத்தார். பிரச்சினைகளை கேட்டதன் பின் ஜனாதிபதி அவர்கள் இந்த விடயங்களில் தான் விஷேட கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஐக்கிய தேசிய கட்சியில் வலையில் சிக்குண்டுள்ளது. இதனால் நமது முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய அநீதிகள் ஏற்பட்டு வருகிறது. இந்த அநீதிகளை தட்டிக் கேட்க முடியதாக தலைமைகளாக நமது முஸ்லிம் தலைமைகள் செயல்படுகின்றன.

பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான விடயங்களுக்கு கைகளை உயரத்திவிட்டு உடனடியாக தொலைக்காட்சியில் வந்து முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்காக நாங்கள் பாராளுமன்றத்தில் கையை உயர்த்தியது மனசாட்சிக்கு விரோதமான செயல் என பகிரங்கமாக சொல்லும் நிலைமை நமது முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பிரேரனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வேளையில் சுதந்திரமான முறையில் குரல் கொடுத்து தங்களின் எதிர்ப்பினை காட்டாமல் செயல்படுகின்றமை குறித்து நமது சமூகம் தலைகுனிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நமது முஸ்லிம் தலைவர்களினதும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கைகளை உயர்த்தி முஸ்லிம் சமூகத்திற்க்கு எதிராக செயல்படுவதற்கான ஏற்பாடுகளை பேரினவாத கட்சித் தலைவர்கள் மிகவும் இலாபகரமான முறையில் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் தோல்வி அடைந்த பின்னர் ஜனநாயக ரீதியில் தமிழ் தலைவர்கள் ஒற்றுமைப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தங்களுக்கான அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான ஜனநாயக ரீதியில் போராட்டம் நடாத்தி வருகின்றனர். இந்த செயற்பாடுகளில் வேகம் போதாது என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் மக்கள் பேரவையை அமைத்து பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் மக்களுக்கு உச்ச அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். தமிழ் மக்கள் தமிழ் பிராந்தியங்களை ஆளவேண்டும் என்பதில் முஸ்லிம் சமூகம் ஒரு போதும் தடையாக செயல்படவில்லை. தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம். ஆனால் முஸ்லிம் சமூகத்தினை ஆள்வதற்கு வரும் போதுதான் நாங்கள் எங்கள் சமூகம் சார்பில் குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

வட கிழக்கு இணைந்திருக்க வேண்டும் அல்லது பிரிந்து இருக்க வேண்டும் என்ற விடயங்களை வட கிழக்கில் வாழும் முஸ்லிம்இ தமிழ்இ சிங்கள  சமூகங்கள் இணைந்து பேசி தீர்வுக்கு வரலாம். ஆனால் முஸ்லிம் தலைவரான றஊப் ஹக்கீம் முஸ்லிம்கள் தமிழ் மக்களின் விடயத்தில் குறுக்காக நிற்கக் கூடாது. வட கிழக்கு மாகாணங்கள் இணைத்து வழங்குமாறு கோரும் உரிமை தமிழ் மக்களுக்கு உள்ளது எனக்கூறி தமிழ் சமூகங்களையும்இ முஸ்லிம் சமூகங்களையும் மோத விடக்கூடிய கருத்துகளைப் பரப்பி வருகிறார் எனவும் தெரிவித்தார்.

அன்று தலைவர் அஷ்ரப் புனித கஃபதுல்லாவில் கேட்ட துஆ இன்று இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.  அன்று தலைவர் அஷ்ரப் புனித கஃபதுல்லாவில் கேட்ட துஆ இன்று இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. Reviewed by Madawala News on 12/31/2017 01:47:00 PM Rating: 5